தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், பல்வேறு தரப்பினரும் அவருக்குத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகை விஜயலட்சுமி பெங்களூருவில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டு விஜய்க்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அதில் “வாழ்த்துகள் விஜய் அண்ணா” என்று குறிப்பிட்ட அவர், நம்பி வாக்களித்த தமிழக மக்கள் சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் இருக்க வேண்டும் எனத் தனது விருப்பத்தைப் பகிர்ந்துள்ளார்.
மேலும், தான் சென்னையில் இருந்திருந்தால் தன்னையும் தவெக கட்சியில் சேர்த்துக் கொள்ளும்படி விஜய்யிடம் கேட்டிருப்பேன் என நடிகை விஜயலட்சுமி அந்த வீடியோவில் பேசியுள்ளார். ஒருபுறம் புதிய உறுப்பினர்களின் வருகை குறித்த எதிர்பார்ப்பு நிலவினாலும், மறுபுறம் ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை அடைய இன்னும் 10 இடங்கள் தவெக-விற்குத் தேவைப்படுகின்றன. காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், அக்கட்சி நிர்வாகிகள் விஜய்க்கு ஆதரவளிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ள நிலையில், அடுத்த சில நாட்களில் தமிழகத்தில் ஒரு புதிய கூட்டணி ஆட்சி அமையுமா என்பது குறித்த பரபரப்பு அதிகரித்துள்ளது.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…