#image_title
ரசிகர்கள் பலரும் தன் கர்ப்பமாக இருப்பதாக வதந்திகளை பரப்பி வரும் காரணத்தினால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை வித்யா வினு மோகன் விளக்கம் அளித்து இருக்கின்றார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த வள்ளி என்ற சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தான் வித்யா. கேரள மாநிலத்தில் பிறந்து வளர்ந்த இவர் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தார். சிறுவயது முதலே சினிமாவில் நடிக்க தொடங்கிய இவர் விளம்பர படங்களிலும், குழந்தை நட்சத்திரமாகவும் பல படங்களில் நடித்திருக்கின்றார்.
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது தான் இவருக்கு முதலில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. மலையாளத்தில் சீதா கல்யாணம் என்கின்ற திரைப்படத்தில் நடித்தார் அதன் பிறகு ஒரு சில மலையாள படங்களில் நடித்திருக்கின்றார். மலையாளம் மட்டுமில்லாமல் கன்னட சினிமாவிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.
பின்னர் தமிழில் அறிமுகமான இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த வள்ளி என்ற சீரியல் மூலமாக மிகவும் பிரபலமானார். அந்த சீரியலில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வந்தார். அதனை தொடர்ந்து அபியும் நானும் என்ற சீரியலிலும் நடித்தார். இந்த சீரியல் கடந்த சில மாதத்திற்கு முன்பு தான் முடிவுக்கு வந்தது. இவரது கணவர் வினு மோகன் ஒரு மலையாள நடிகர் ஆவார்.
இவர்கள் இருவரும் நிவேதயம் என்கின்ற மலையாள திரைப்படத்தில் நடித்த போது காதலிக்க பின்னர் திருமணம் செய்து கொண்டனர். அபியும் நானும் சீரியலை தொடர்ந்து எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்து வரும் இவர் குடும்பத்துடன் கேரளாவில் வசித்து வருகின்றார். இந்நிலையில் சமீபத்தில் அவர் தனது வயிற்றில் கை வைத்து நின்றபடி ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.
இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அவர் கர்ப்பமாக இருக்கிறார் எனக் கூறி வந்தார்கள். நீண்ட நாட்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக பல வதந்திகளை பரப்பி வந்த நிலையில் ரசிகர்களின் அன்பு தொல்லை தாங்காமல் நடிகை வித்யா வினு மோகன் நான் கர்ப்பமாக இல்லை என்பதை கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றார். திருமணம் ஆகி 11 ஆண்டுகள் கடந்த நிலையில் இவருக்கு இன்னும் குழந்தை இல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வாக, திமுக கூட்டணியில் இருந்து மதிமுக அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ…
தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநரும், நடிகருமான ‘திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜ் திடீர் மாரடைப்பால் காலமான செய்தி ஒட்டுமொத்தத் திரையுலகையும்,…
தமிழ் திரையுலகில் திரைக்கதை அமைப்பதில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி, 'திரைக்கதை மன்னன்' என்று போற்றப்பட்டவர் இயக்குநர் கே.…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த புதிய நியமனம் உடனடியாக அமலுக்கு…
சென்னை தாம்பரம் அருகே உள்ள கழுகுமலை உச்சியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோவிலில், குரங்குகள் சூழ்ந்து கொண்டதால் ஏற்பட்ட அதிர்ச்சியிலும்…
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் இந்த காரசாரமான விமர்சனம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக…