கேரளாவை சேர்ந்தவர் தான் நடிகை வித்யா பிரதீப். பயோ டெக்னாலஜி படிப்பில் முதுகலை பட்டம் பெற்ற இவர் தற்போது வெளிநாட்டில் மருத்துவத் துறையில் பணியாற்றி வருகின்றார். இவருக்கு சிறுவயதிலிருந்தே மாடல் மற்றும் நடிகையாக வேண்டும் என்பதுதான் கனவாக இருந்துள்ளது. அதனால் படிப்பிலும் கவனம் செலுத்தி கொண்டு நடிப்பிலும் சாதித்தார். இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்குனர் மீரா கதிரவன் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் வெளியான அவள் பெயர் தமிழரசி என்ற திரைப்படத்தில் டான்சர் கதாபாத்திரத்தில் முதன்முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இந்தத் திரைப்படத்தில் தன்யா என்ற சிறு கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தாலும் இவருடைய நடிப்பு மற்றும் நடனம் பெரிதும் கவனிக்கப்பட்டது. இந்த படத்திற்கு பிறகு இவர் ஹீரோயினியாக நடித்த திரைப்படம் தான் விருந்தாளி. இதில் மைக்கில் ஈஸ்வர் ஹீரோவாக நடித்திருந்த நிலையில் இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே ஹீரோவான மைக்கிலை காதலித்த பெற்றோர் சம்மதத்துடன் தன்னுடைய 18 வயதில் திருமணம் செய்து கொண்டார். மைக்கில் சில படங்கள் மட்டுமே நடித்த நிலையில் தற்போது புகைப்பட கலைஞராக இருந்து வருகின்றார்.
திருமணத்திற்குப் பிறகு தனது மனைவிக்கு உறுதுணையாக இருந்து அவரை பயோ டெக்னாலஜி முதுகலை பட்டம் வரை படிக்க வைத்ததோடு மட்டுமல்லாமல் ஒரு நடிகையாக இருப்பதற்கும் சுதந்திரம் கொடுத்தவர். இந்த நிலையில் வித்யா பிரதீப் சைவம் திரைப்படத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு பெயரை பெற்றார். அதனைப் போலவே சூர்யா நடிப்பில் வெளியான பசங்க 2 திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இவர் இதுவரை 35க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சன் டிவியில் நாயகி என்ற சீரியலிலும் இவர் கதாநாயகியாக நடித்திருந்த நிலையில் தற்போது திருமணமாகி 13 ஆண்டுகளுக்குப் பிறகு வித்யா பிரதீப் கர்ப்பமாக இருக்கும் செய்தியை சமீபத்தில் வெளியிட்டிருந்தார். இதனை தொடர்ந்து ரசிகர்கள் திரைபிரபலங்கள் பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் இவருக்கு விரைவில் குழந்தை பிறக்க உள்ள நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் வயிற்றுடன் கணவருடன் ரொமான்டிக் போட்டோ சூட் நடத்தியுள்ளார்.
அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். கடந்த சில வாரங்களுக்கு முன், தான் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார் நடிகை வித்யா. இந்த நிலையில் தற்போது நடிகை வித்யா பிரதீப் – மைக்கேல் தம்பதிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. தனது குழந்தையின் புகைப்படத்துடன் வித்யா பிரதீப் இந்த விஷயத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…