90களில் காமெடி நடிகர் கவுண்டமணி மற்றும் செந்திலுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்தவர் நடிகை விசித்ரா. இவர் தமிழ் மொழியை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்ன பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் .
வெள்ளி திரையில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் படு பிஸியாக நடித்துக் கொண்டிருந்தவர். இவர் நடிப்பில் முதலில் வெளியான படம் ‘ஜாதிமல்லி’. இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் இப்படம் வெளியானது.
சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே சீரியலிலும் அதிக கவனம் செலுத்தி நடித்து வந்தார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘முத்து’ படத்தில் இவர் நடித்த ரதிதேவி என்கிற கதாபாத்திரம் மூலம் மக்கள் மத்தியில் மிகப் பிரபலம் அடைந்தார்.
2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர் சினிமா துறைக்கு குட் பாய் கூறினார். தம்பதியினருக்கு மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இதைத்தொடர்ந்து தற்பொழுது இவர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் சீரியல்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.
அந்த வகையில் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘கார்த்திகை தீபம்’ தொடரில் ராஜஸ்ரீ என்ற கதாபாத்திரத்திலும், தெலுங்கு சேனல் ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் ‘கீதா கோவிந்தம்’ என்ற சீரியலில் முக்கோட்டமா என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
இதோடு மட்டுமில்லாமல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் மிகப்பிரபலமடைந்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை விசித்ரா. இவர் தற்பொழுது தனது மகனுடன் எடுத்துக் கொண்ட அழகான புகைப்படங்களை இணையத்தில் பகிர,
இந்த புகைப்படங்கள் தற்பொழுது படுவைரலாகி வருகிறது. இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘நடிகை விசித்ராவின் மகனா இவர்? சும்மா ஹீரோ போல இருக்காரே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழக வெற்றி கழக…
உத்தரபிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்தில், தனது மனைவி தன்னுடன் உடலுறவு கொள்ள மறுத்ததாகக் கூறி, கணவர் ஒருவர் தனது வீட்டின் மாடியிலிருந்து…
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வரும் நிலையில் அதிமுக மற்றும் திமுக…
தமிழகத்தில் பட்டா நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்வதை எளிமையாக்க அரசு புதிய இணையவழி விண்ணப்ப வசதியை அறிமுகம்…
உத்திரபிரதேசம் மாநிலம் முசாபர் மாவட்டத்தை சேர்ந்த 24 வயது இளைஞர் சவுதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து தன்னுடைய மனைவியுடன் வீடியோ…
ஈரோடு மாநகராட்சி முனிசிபல் காலனியில் செயல்படும் ஈரோடு கூட்டுறவு நகர வங்கியில் வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்த நகை கையாடல் செய்யப்பட்டதாக…