தமிழில் ‘நெடுஞ்சாலை’ படத்தின் மூலம், தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் மலையாள நடிகை ஷிவதா. மேலும் ’அதே கண்கள்’, ஸிரோ, ஆகிய படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். திருமணத்திற்கு பிறகும், தொடர்ந்து கதாநாயகியாகவே நடித்துவந்தார். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு முரளிகிருஷ்ணன் என்பவரை காதலித்து, திருமணம் செய்துகொண்டார்.
இதைதொடர்ந்து கர்ப்பமான இவர் திரையுலகை விட்டு சற்று ஒதுங்கியே இருந்தார். இவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. நடிகை ஷிவதா தனது பெண் குழந்தைக்கு ‘அருந்ததி’ என்று பெயர் சூட்டியுள்ளார். இவர் நடிகர் ஆரி அர்ஜுனன் உடன் நடித்து 2014 ஆம் ஆண்டு கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான நெடுஞ்சாலை படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தனது சிறப்பான நடிப்பின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் நடிகை ஷிவதா. தமிழ் சினிமாவில் குறைந்த படங்களே நடித்து இருந்தாலும் இவர் மலையாளத்தில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக இவர் சூரி நடிப்பில் வெளியான கருடன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் நடிகை ஷிவதா 2024 ஆம் ஆண்டு பொது வீடு ஒன்றை கட்டிக் கொண்டிருந்த நிலையில் தற்போது 2025 ஆம் ஆண்டில் அந்த வீட்டை கட்டி முடித்து குடியேறியுள்ளார். அது தொடர்பான வீடியோ ஒன்றை தனது குழந்தையுடன் அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வர ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள புரூக்ளின் பகுதியில் நிகழ்ந்த கோர விபத்து ஒன்றில், பழமையான மூன்று மாடிக் கட்டிடம் இடிந்து தரைமட்டமானதில்…
சோஹ்ரத்கர் நகரின் 11-வது வார்டுக்கு உட்பட்ட ரகுநாத்நகர் பகுதியில், காஜல் என்ற பெண்ணும் அவரது 18 மாத மகன் டைகரும்…
செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிப்பில் முன்னணியில் உள்ள என்விடியா நிறுவனத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தி உச்சத்திற்குக் கொண்டு சென்ற…
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள பண்டிகவுடனபாள்யா கிராமத்தைச் சேர்ந்த சிக்கமரியப்பா மற்றும் அவரது மனைவி நரசம்மா ஆகியோர், திங்கள்கிழமை…
இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் பெறும் விவாகரத்துத் தீர்ப்புகள் இந்தியாவில் தானாகவே செல்லுபடியாகாது என்று உச்ச நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு…
உலகளாவிய சந்தையில் ஏற்பட்டுள்ள தொடர் சரிவின் எதிரொலியாக, உள்நாட்டிலும் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நான்கு தினங்களில் சவரனுக்குச் சுமார்…