நடிகர் விஷால், ரீமாசென் நடிப்பில் உருவான ‘திமிரு’ படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர் நடிகை ஸ்ரேயா ரெட்டி. இவரின் முரட்டுத்தனமான நடிப்புக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இப்படத்தில் ‘ஏலே இசுக்கு’ என்ற இவரது டயலாக் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. ஈஸ்வரி கதாபாத்திரத்தில் அவர் விட்ட சவுண்டு இன்றுவரை காதில் கேட்டுக்கொண்டே தான் இருக்கிறது.
இவர் முதன் முதலில் நடிகர் விக்ரமின் ‘சாமுராய்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார். பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே இவர் நடிகர் விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்கு பின்னர் குடும்பத்தை பார்த்துக் கொண்டு குழந்தையை வளர்ப்பதில் கவனம் செலுத்தினார். இதை தொடர்ந்து அவர் சினிமாவில் ‘அண்டாவ காணோம்’ என்ற திரைப்படத்தின் மூலம் ஒரு சூப்பர் என்ட்ரி கொடுத்தார். இவர் நடிப்பில் வெளியான ‘சுழல்’ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
இதைத்தொடர்ந்து வெளியான சலார் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் ஸ்ரேயா ரெட்டி. இவர் தற்பொழுது தனது மிரர் செல்பி புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வர்ணித்து உருகி வருகின்றனர்.
அமெரிக்க நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளைத் திரும்ப வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க…
மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்தில், 25 வயது இளம் தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து…
நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் 2026 பொதுத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள வாக்குப்பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும்…
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜய் ஆளும் திமுக…
1991-ம் ஆண்டு அக்டோபர் மாதம், கலிபோர்னியாவின் ஹண்டிங்டன் பீச்சில் உள்ள ஒரு விடுதியில் 56 வயதான விமானி பில் நெல்சனை,…
இன்று, ஏப்ரல் 22, 2026 அன்று, ஜோதிட உலகின் மிக முக்கிய நிகழ்வாக சனி பகவான் மீன ராசியில் 'உதயம்'…