நடிகர் விஷால், ரீமாசென் நடிப்பில் உருவான ‘திமிரு’ படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர் நடிகை ஸ்ரேயா ரெட்டி. இவரின் முரட்டுத்தனமான நடிப்புக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இப்படத்தில் ‘ஏலே இசுக்கு’ என்ற இவரது டயலாக் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. ஈஸ்வரி கதாபாத்திரத்தில் அவர் விட்ட சவுண்டு இன்றுவரை காதில் கேட்டுக்கொண்டே தான் இருக்கிறது.
இவர் முதன் முதலில் நடிகர் விக்ரமின் ‘சாமுராய்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார். பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே இவர் நடிகர் விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்கு பின்னர் குடும்பத்தை பார்த்துக் கொண்டு குழந்தையை வளர்ப்பதில் கவனம் செலுத்தினார். இதை தொடர்ந்து அவர் சினிமாவில் ‘அண்டாவ காணோம்’ என்ற திரைப்படத்தின் மூலம் ஒரு சூப்பர் என்ட்ரி கொடுத்தார். இவர் நடிப்பில் வெளியான ‘சுழல்’ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
இதைத்தொடர்ந்து வெளியான சலார் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் ஸ்ரேயா ரெட்டி. இவர் தற்பொழுது தான் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.இதோ அந்த வீடியோ…
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் கல்லூர் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் ஜில்லேலா ரவி (15), தசரா விடுமுறைக்காகத்…
லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்…
தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்குப் பிறகு சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளைக்…
தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களிடம் கட்சித் தலைமை முன்கூட்டியே ராஜினாமா கடிதங்களைப் பெற்று வைத்துள்ளதாகப் பிரபல நாளிதழ் ஒன்று…
பண்டிகை நாள்கள் மற்றும் அதற்கு முந்தைய நாள்களில் மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கத் தமிழக…
ஸ்பெயினைச் சேர்ந்த காவல்துறை தம்பதியரான ஜெசிகா முனோஸ் பரேடஸ் மற்றும் பெலாயோ அல்வாரெஸ் ரெவூல்டா ஆகியோர், ஒருவருக்கொருவர் கைவிலங்கு அணிந்தபடி…