இயக்குனர் கார்த்தி இயக்கத்தில் உருவான படம் ரெய்டு. ஆக்சன் திரில்லராக உருவான இந்த படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஸ்ரீதிவ்யா ஜோடியாக நடித்துள்ளார்.
இந்த படத்தில் அனந்திகா, ரிஷி ரித்விக், சௌந்தரராஜன் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை எஸ்கே கனிஷ்க் மற்றும் ஜி கே ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.
இந்த படத்திற்கு இயக்குனர் முத்தையா வசனம் எழுதியுள்ளார். கதிரவன் ஒளி பதிவு செய்துள்ளார். வருகிற 10- ஆம் தேதி ரெய்டு திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது.
இந்நிலையில் ரெய்டு பட பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்வதற்காக நடிகை ஸ்ரீதிவ்யா சென்னைக்கு வந்துள்ளார். ஸ்ரீதிவ்யா கூறியதாவது, ரெய்டு படம் நான் முத்தையா சார்க்காக தான் நடித்தேன். மருது படத்தில் எனக்கு அருமையான கதாபாத்திரம் கொடுத்தார்.
விக்ரம் பிரபு உடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. அனைவருக்கும் வாழ்த்துக்கள் என கூறியுள்ளார். முதலில் இருந்ததை விட ஸ்ரீதிவ்யா தற்போது குண்டாக அனுஷ்கா போல காட்சியளிக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் ஸ்ரீதிவ்யாவா இது என ஆச்சரியத்தில் உள்ளனர்.
கரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி வெளியிட்ட அறிக்கை பெரும்…
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பரப்புரை நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், மதுரை மத்திய தொகுதியின் களம் உணர்ச்சிப்பூர்வமான திருப்பங்களைக் கண்டுள்ளது.…
தமிழகத்தில் நாளை நடைபெறும் சட்டமன்றத் தேர்தல், ஒரு சாதாரண நிகழ்வு அல்ல; அது மக்களின் ஜனநாயகக் கடமையை நிலைநாட்டும் மிக…
பாகிஸ்தானில் நடைபெறவிருந்த அமெரிக்கா - ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்ட சூழலில், ஈரான் மீதான போர் நிறுத்தத்தை அமெரிக்க…
சிங்கப்பூர் மற்றும் தமிழக இலக்கிய உலகின் பேராளுமையான 'புதுமைத்தேனீ' மா. அன்பழகன் அவர்கள், தனது 83-வது வயதில் காலமான செய்தி…
வங்கிக் கணக்கிலிருந்து திடீரென பணம் கழிக்கப்படும்போது ஏற்படும் பதற்றம் இனி இருக்காது. ரிசர்வ் வங்கியின் புதிய இ-ஆணை (e-mandate) விதிகள்…