தமிழ் சினிமா ரசிகர்கள் ‘புன்னகை இளவரசி’ என்று கொண்டாடப்படுபவர் நடிகை சினேகா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். பல ரசிகர்களை கவர்ந்த இவர் தமிழ் திரையுலகில் ‘என்னவளே’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
இதை தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக இணைந்து நடித்த முன்னணி நடிகையாக உயர்ந்தார். சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் இணைந்து ‘அச்சம் உண்டு அச்சம் உண்டு’ திரைப்படத்தில் இணைந்து நடித்தனர்.
அப்பொழுது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. இதைத்தொடர்ந்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இன்று திரையுலகம் கொண்டாடும் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு ஆத்யந்தா, விஹான் என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
திருமணத்திற்கு பிறகு திரை வாழ்க்கை விட்டு சற்று விலகி இருந்த நடிகை சினேகா தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘பட்டாசு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு சூப்பர் ரீ என்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து அவர் தற்பொழுது நடிகர் விஜயுடன் இணைந்து தளபதி68 திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் நடிகை சினேகா.
அவ்வப்பொழுது தனது குடும்ப புகைப்படங்களையும், போட்டோஷூட் புகைப்படங்களையும் இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது இவர் புடவையில் கொள்ளை அழகில் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இப்புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது..
கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு பகுதியில் உள்ள பிரபல JSS பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து முடித்த 19 வயதான…
திருமண உறவின் நம்பகத்தன்மையைச் சீர்குலைக்கும் கள்ளக்காதல் விவகாரங்கள், பல நேரங்களில் எதிர்பாராத அசம்பாவிதங்களுக்கும் குடும்பப் பிரிவுகளுக்கும் வழிவகுக்கின்றன. அந்த வகையில்,…
காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, வரும் அக்டோபர் மாதம் சென்னைக்கு வருகை தரவுள்ளார்.…
பணி ஓய்வு பெறவிருக்கும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ராதாகிருஷ்ணனுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ள நடவடிக்கை,…
2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த தமிழக வெற்றிக் கழகம், பெரும்பான்மையை நிரூபிக்க திமுக…
தென்னிந்தியத் திரையுலகின் பிரபல மூத்த நடிகைகளான அம்பிகா மற்றும் ராதா சகோதரிகளுக்கு இடையே எழுந்துள்ள ரூ.47 கோடி காசோலை விவகாரம்,…