Categories: சினிமா

அத பத்தி தயவுசெய்து கேட்காதீங்க.. திருமணம் குறித்த கேள்விக்கு கடுப்பான ஸ்ருதிஹாசன்.. ரசிகர்களுக்கு கொடுத்த பதில்..!

Spread the love

திருமணம் குறித்து தன்னிடம் கேள்வி கேட்க வேண்டாம் என்றும் நான் திருமணம் செய்து கொள்ள போவதில்லை என நடிகை ஸ்ருதிஹாசன் கூறி இருக்கின்றார்.

தமிழ் சினிமாவில் உலகநாயகன் கமலஹாசன் அவர்களின் மகள் என்ற அடையாளத்துடன் அறிமுகமான ஸ்ருதிஹாசன் ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமான நடிகையாக மட்டுமில்லாமல் பாடகி, இசையமைப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவர். தமிழ் மொழியில் சூர்யா, அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகருடன் ஜோடி போட்டு நடித்தார்.

பின்னர் தெலுங்கு சினிமா பக்கம் போன இவர் அங்கும் பிரபல நடிகையாக வலம் வந்தார். தற்போது தெலுங்கில் தான் அதிக திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் கடைசியாக சலார் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் சுமாரான வெற்றியை கொடுத்தது. இதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து இனிமேல் என்ற ஆல்பம் பாடலை இசையமைத்து வெளியிட்டார்.

இந்த பாடல் நல்ல வரவேற்பு பெற்றது. இயக்குனராக பார்த்த லோகேஷை ஒரு நடிகராக பார்க்க வைத்து விட்டார் ஸ்ருதிஹாசன். தெலுங்கில் கவனம் செலுத்தி நடிக்க தொடங்கிய சுருதிஹாசன் பின்னர் தமிழில் எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது.

நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது வரை இரண்டு பேரை பிரேக் அப் செய்து இருக்கின்றார். முதலாவது லண்டனை சேர்ந்த நாடக நடிகரான மைக்கேல் கார்சேல் என்பவரை காதலித்து வந்தார். பின்னர் அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பிரேக்கப் செய்து கொண்ட ஸ்ருதிஹாசன் பின்னர் விஷுவல் ஆர்டிஸ்ட் சாந்தனு ஹசாரிகா என்பவரை கடந்த நான்கு வருடங்களாக காதலித்து வந்தார். மேலும் மும்பையில் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர்.

தற்போது அவரையும் பிரிந்து தனியாக வசித்து வருகின்றார் ஸ்ருதிஹாசன். சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அவ்வபோது தனது ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து வருவார். அப்போது சிலர் ரசிகர்கள் ஸ்ருதிஹாசன் திருமணம் குறித்து கேள்வி கேட்டனர் அதற்கு எரிச்சலுடன் பதில் அளித்து இருக்கின்றார். ஒரு ரசிகர் உங்களுக்கு கல்யாணம் எப்போ என்று கேட்டதற்கு இது மிக எரிச்சல் ஊட்டும் கேள்விகள் திரும்ப கேட்க வேண்டாம் என்று கேட்டார்.

#image_title

நீங்கள் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள் என்று கேட்ட கேள்விக்கு திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று பதில் அளித்து இருக்கின்றார். நீங்கள் எப்படிப்பட்டவரை கல்யாணம் செய்யப் போகிறீர்கள் என்று கேட்டபோது இது 2024 பெண்களிடம் இதுபோல அறிவற்ற, தேவையற்ற கேள்விகளை கேட்க வேண்டாம். இதையெல்லாம் எப்போது நிறுத்தப் போகிறீர்கள் என்று மிகப் கோபமாக பதில் அளித்து இருந்தார் ஸ்ருதிஹாசன்

Mahalakshmi

Recent Posts

“பெற்றோர் இல்லாத நேரம்.. மிரட்டி மிரட்டி வன்கொடுமை”… 15 வயது சிறுமியை சீரழித்த தாய்மாமன்.. தமிழகத்தை உலுக்கிய சம்பவம்…!

செங்கல்பட்டு மாவட்டம் சேலையூர் பகுதியில் வசித்து வரும் கட்டிடத் தொழிலாளி தம்பதியினரின் 16 வயது மகள் காவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).…

11 minutes ago

“தனிமையில் இருக்கலாம் வா.. போனில் அழைத்த காதலி”… ஹோட்டலுக்கு சென்ற காதலனுக்கு காத்திருந்த அதிர்ச்சி… ஆக்ராவில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், தன்னைத் தொடர்ந்து மிரட்டி வந்த முன்னாள் காதலனை இளம்பெண் ஒருவர் ஓட்டல் அறைக்குள் வைத்து…

23 minutes ago

அரசியல்வாதிகளின் அறைகளுக்குள் நுழையாமல்… பெண்களால் அரசியலுக்கு வர முடியாது… பப்பு யாதவின் சர்ச்சை கருத்தால் பற்றி எரியும் அரசியல்..!!

பெண் அரசியல்வாதிகள் குறித்துப் பீகார் மாநிலம் பூர்ணியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பப்பு யாதவ் தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கள் நாடு…

25 minutes ago

“ஈரானை விடமாட்டோம்!”: கடல்புறமாக வளைத்துப்பிடித்த அமெரிக்கா… உயிர்ச் சேதங்கள் மோசமாக இருக்கும்”… வல்லுநர்கள் எச்சரிக்கும் 2026-ன் மிகப்பெரிய வளைகுடா போர்?…!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் நாளை புதன்கிழமையுடன் முடிவுக்கு வரும் நிலையில், மத்திய கிழக்கில்…

27 minutes ago

“தப்பிக்க 3 செகண்ட் தான் இருந்தது” என் கண் முன்னே சாம்பலாகி போயிட்டாங்க… திருச்சூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிர் பிழைத்தவர் பகீர் வாக்குமூலம்..!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஒரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் சிக்கி 12 பேர் பலியாகினர்.…

28 minutes ago