முடிவுக்கு வந்த 14 வருட திருமண வாழ்க்கை… கணவரை பிரிந்த விஜய் பட நடிகை … இதுதான் காரணமா…? 

By Begam on ஐப்பசி 21, 2023

Spread the love

பாலிவுட் திரை உலகில் 90களில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஷில்பா ஷெட்டி. ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள இவர் தமிழில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக மிஸ்டர். ரோமியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு விஜயின் குஷி திரைப்படத்தில் பேக்கரினா என்னும் பாடலில் நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்திருந்த இவர் பாலிவுட்டில் எக்கசக்கமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

   

கடந்த 2009ல் ராஜ் குந்த்ரா என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு,  இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் ஷில்பா ஷெட்டிக்கு தற்போது 48 வயது ஆகியுள்ளது. ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா, கடந்த 2021-ம் ஆண்டு ஆபாச பட வழக்கில் கைதானார். ஆபாச படங்களை தயாரித்து அதனை ஆன்லைனில் வெளியிட்டு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டார்.

   

 

அந்த நேரத்தில் ஷில்பா ஷெட்டி தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றதாக கூறப்பட்டது. இந்த நிலையில் அதனை உறுதிப்படுத்தும் வகையில் ராஜ் குந்தரா தனது சமூக வலைதளத்தில் நாங்கள் இருவரும் பிரிந்துவிட்டோம் என்று பதிவிட்டு அவர்களின் விவாகரத்தை உறுதிப்படுத்தியுள்ளார். இதன்மூலம் ராஜ் குந்தரா-ஷில்பா ஷெட்டி ஜோடியின் 14 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.