பார்த்திபனுடன் விவாகரத்து… நடிகை சீதா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?… வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்…

By Archana on ஜூன் 18, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் 90களில் மிகப்பிரபலமான நடிகையாக சினிமாவில் வலம் வந்தவர் நடிகை சீதா.

   

இவர் நடிகரும் இயக்குனருமான பாண்டியராஜன் இயக்கத்தில் வெளியான ஆன் பாவம் என்ற திரைப்படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார்.

   

 

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழித்திரைப்படங்களில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகை சீதா தமிழ் சினிமாவின் ஜாம்பவானான நடிகரும் இயக்குனருமான பாக்யராஜனிடன் உதவி இயக்குனராக இருந்த வந்தார் நடிகர் பார்த்திபன் படத்தில் நடித்திருந்தார்.

பார்த்திபன் முதல் முதலாக புதிய பாதை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் சீதா.

முதல் படத்திலேயே பார்த்திபன் மற்றும் சீதா இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு அது திருமணத்தில் முடிந்தது.

கடந்த 1990 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கிட்டத்தட்ட பத்து வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு இரண்டு பெண்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார்.

மிக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களின் குடும்ப வாழ்க்கை 2001 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இருவருக்கும் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர்.

அதன் பிறகு சீதா, ரமேஷ் என்ற சீரியல் நடிகரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் பார்த்திபன் திருமணம் செய்து கொள்ளாமல் தனது இரண்டு பெண் பிள்ளைகளுக்காக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

முழுக்க முழுக்க சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கி விட்டார் பார்த்திபன். இதனிடையே சிறிது காலம் சீரியலில் தலை காட்டி வந்த சீதா இரண்டாவது கணவரையும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டு தற்போது தனிமையில் வாழ்ந்து வருகிறார்.

அதே சமயம் youtube சேனல் ஒன்றைத் தொடங்கி அதிலும் பலவிதமான வீடியோக்களை தினம்தோறும் பதிவேற்றம் செய்து வருகிறார்.

தற்போது சீதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.