தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சயிஷா. இவர் 2015-ல் வெளியான ‘அகில்’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதை தொடர்ந்து ஹிந்தியில் கால் பதித்த இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்தார்.
அதன் பிறகு வனமகன், குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த், காப்பான், டெடி என பல ஹிட் தமிழ் திரைப்படங்களில் நடித்து அசத்தினார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல மொழி திரைப்படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார் நடிகை சாயிஷா. இவர் நடிப்பை தாண்டி நடனம் ஆடுவதிலும் வல்லவர். இவர் தனது உடம்பை ரப்பர் போல் படைத்து நடனமாடுவதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார்.
நடிகை சயீஷா நடிகர் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் கஜினிகாந்த் திரைப்படத்தில் இணைந்து நடித்த பொழுது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. இதைத்தொடர்ந்து இருவீட்டார் சம்மதத்துடன் 2019ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தற்பொழுது அரியானா என்ற மகள் உள்ளார்.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை சயீஷா. இவர் தற்பொழுது தனது மகள் அரியானா மற்றும் தனது அம்மாவுடன் இணைந்து மதிய உணவிற்கு வெளியில் சென்றுள்ளார். அதனை வீடியோவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதோ அந்த வீடியோ….
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…