தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. முன்னணி ஹீரோவாக வலம் வந்தாலும் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் தயங்காமல் நடிப்பார். இவர் இறுதியாக விடுதலை திரைப்படத்தின் சூரி உடன் இணைந்து நடித்திருந்தார். அந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இவர் மாஸ்டர் மற்றும் விக்ரம் போன்ற திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார்.
இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்திய அளவில் அனைவரிடமும் கவனத்தை ஈர்த்து வருகிறது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழிட்டா பல தென்னிந்திய மொழி திரைப்படங்களில் பிஸியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதே சமயம் அட்லீ இயக்கும் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்திலும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இப்படி ஹீரோ மற்றும் வில்லன் என அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்து மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார். இதனிடையே 2003 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி ஜெஸ்ஸி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு சூர்யா , ஸ்ரீஜா என்ற மகன் மற்றும் மகள் உள்ளனர். இதில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ஒரு சில தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் விஜய் சேதுபதி தன்னுடைய வாழ்வில் நடைபெறும் பல விஷயங்களை முடிந்த அளவிற்கு தன் மகனிடம் பேசுவதாக கூறி உருக்கமாக பேசியுள்ளார். அவர் சமீபத்தில் ஒரு யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…