#image_title
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேல் பல்வேறு வகைப்பட்ட வேடங்களில் நடித்துக் கலக்கி வருபவர் சத்யப்பிரியா. தற்போது கூட சன் தொலைக்காட்சியின் எதிர்நீச்சல் சீரியலில் நடித்திருந்தார். 1951 ஆம் ஆண்டு பிறந்த சத்யபிரியா முதல் முறையாக சினிமாவில் நடித்தது மஞ்சள் முகமே வருக என்ற திரைப்படம்தான்.
அதன் பிறகு பல படங்களில் நடித்த சத்யபிரியா வில்லி, கிளாமர் நடிகை என பல வேடங்களில் நடித்தார். இதற்கிடையில் தயாரிப்பாளர் முகுந்தா என்பவரை திருமணம் செய்துகொண்டு ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகினார். அப்போதெல்லாம் நடிகைகளுக்கு திருமணம் ஆகிவிட்டால் இனிமேல் அவர்கள் நடிக்க வரமாட்டார்கள் என நினைத்து அவர்களை அழைப்பதையே நிறுத்திவிடுவார்கள்.
sathyapriya
அதுபோல 1983 ஆம் ஆண்டிலிருந்து 89 ஆம் வருடம் வரை அவர் எந்த படங்களிலும் நடிக்கவில்லை. அந்த காலங்களில் அவர் மருத்துவமனையில் சூப்பர்வைசராக வேலைப் பார்த்தாராம். அப்போதெல்லாம் அவர் பஸ்ஸில் மருத்துவமனைக்கு சென்று வருவாராம். ஆனால் அந்த வேலை செய்ததில் அவருக்கு எந்த வருத்தமும் இல்லை என்று சொல்லியுள்ளார்.
இதற்கிடையில் கணவருக்கு கேன்சர் நோய் கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த வருமானம் போதாது என்று மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளார். அதனால் மீண்டும் வாய்ப்புத் தேட அப்போதுதான் அவருக்கு பார்த்திபனின் புதிய பாதை பட வாய்ப்புக் கிடைத்துள்ளது.
Puthiya pathai
அந்தபடத்தில் விபச்சாரம் நடத்தும் ஒரு பெண்ணாக அவரை நடிக்க சொல்லியுள்ளார் பார்த்திபன். அதுமட்டுமில்லாமல் கதாநாயகியைக் கற்பழிக்க பார்த்திபனை பணம் கொடுத்து அனுப்பும் வக்கிரபுத்தி உள்ள ஒரு பெண் வேடம். அந்த வேடத்தில் நடிக்க முதலில் சத்யபிரியா தயங்கியுள்ளார். ஆனால் பார்த்திபன் ‘இந்த படத்தில் நீங்கள் நடித்தால் எல்லோரும் உங்களைத் திட்டுவார்கள். ஆனால் உங்களுக்குத் தொடர்ந்து படங்கள் வரும்” என சொல்லி சமாதானப்படுத்தி நடிக்க வைத்துள்ளார். அந்த படம் வெளியாகி அவர் சொன்னதுபோலவே இன்று வரை நடிகையாக கலக்கி வருகிறார் சத்யப்ரியா.
ஸ்பெயினைச் சேர்ந்த காவல்துறை தம்பதியரான ஜெசிகா முனோஸ் பரேடஸ் மற்றும் பெலாயோ அல்வாரெஸ் ரெவூல்டா ஆகியோர், ஒருவருக்கொருவர் கைவிலங்கு அணிந்தபடி…
குவஹாத்தி செல்லும் ரயிலில் பயணம் செய்த அமித் அவஸ்தி என்ற பயணி, தனது உணவில் பாதிக்கு மேல் சாப்பிட்ட பிறகு…
அசாம் ரயில் விபத்து நிகழ்வதற்குச் சற்று முன்பு, ரயில் இன்ஜின் அறைக்குள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.…
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்திய மக்கள் தொகை கணக்கீட்டு பலகையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…
மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டம் பன்வெல் அருகே உள்ள களம்போலி பகுதியில் கடந்த திங்கள்கிழமை இரவு காவல்துறையினர் வழக்கமான 'நாகாபந்தி'…
கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகேயுள்ள மத்திக்கோடு பகுதியில் நிகழ்ந்த கோர இருசக்கர வாகன விபத்தில், பூதப்பாண்டியைச் சேர்ந்த 13 வயது…