Categories: சினிமா

பாலா சார் அந்த உண்மையை சொல்லவேயில்லை… பிதாமகன் படத்தில் எனக்கு வாய்ப்புக் கிடைத்தது இப்படிதான் –சங்கீதா பகிர்ந்த தகவல்!

Spread the love

தமிழ் சினிமாவில் தன்னுடைய கதைகளில் ரௌத்திரத்தை ஏற்றி பார்வையாளர்களை திகைத்துப் போக வைக்கும் படங்களை எடுத்தவர் இயக்குனர் பாலா. அவர் இயக்கிய சேது, பிதாமகன், நான் கடவுள் போன்ற படங்கள் அவற்றின் உருவாக்கத்தால் இன்றளவும் எட்ட முடியாத உயரத்தில் இருக்கின்றன.

அவர் படங்களில் நடித்த பின்னர்தான் விக்ரம், சூர்யா மற்றும் ஆர்யா ஆகியோர் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்தனர். அதனால் அவர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பதில் பல இளம் ஹீரோக்கள் ஆர்வமாக இருந்தார்கள். அவர் படங்களில் கதாநாயகர்கள் பெரிய அளவுக்கு உயர்ந்தாலும், கதாநாயகிகள் போன இடம் தெரியாமல் காணாமல் போனார்கள்.

இயக்குனர் பாலாவுக்கு சமீபகாலமாக திரைவாழ்க்கை சிறப்பாக அமையவில்லை. அவர் இயக்கிய தாரை தப்பட்டை படம் அட்டர் ப்ளாப் ஆனது. வர்மா படம் அவர் இயக்கியது பிடிக்கவில்லை என்று மீண்டும் வேறொரு இயக்குனரால் இயக்கப்பட்டது. அதே போல சூர்யாவை வைத்து அவர் முதலில் இயக்கிய வணங்கான் படத்தில் இருந்து வெளியேறினார். இதையடுத்து அருண் விஜய்யை வைத்து அவர் வணங்கான் படத்தை ரிலீஸ் செய்துள்ளார். அந்த படம் சுமாரான வெற்றியைப் பெற்றுள்ளது.

அவர் படம் மூலமாகக் கவனம் பெற்ற நடிகர்களில் ஒருவர் சங்கீதா. அவர் கதாநாயகியாக பல படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை. அவர் பாலாவின் பிதாமகன் படத்தில் நடித்த பின்னர்தான் அவரை ரசிகர்கள் கண்டுகொண்டார்கள்.

இந்நிலையில் அவர் தனக்கு எப்படி பிதாமகன் படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது என்பது பற்றி ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். அதில் “நான் ஆந்திராவில் இருந்த போது ஒரு நாள் பாலா சார் அழைத்து ‘என்ன செய்கிறாய்?’ எனக் கேட்டார். நான் ‘சும்மாதான் இருக்கேன் சார்’ என்றேன். உடனே மதுரை வர சொல்லி பிதாமகன் படத்தின் வாய்ப்பைக் கொடுத்தார்.

ஆனால் சில நாட்கள் ஷுட்டிங் முடிந்த பின்னர்தான் எனக்கு முன்னால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தவர் ஓடிப்போய்விட்டார் என்பது எனக்குத் தெரியவந்தது. இதை எனக்கு பாலா சார் சொல்லவெ இல்லை.” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

“அம்மா என்னைக் காப்பாத்துங்க…” மகனின் கடைசி வார்த்தைக்காகப் போராடும் தாய்….! லக்கிம்பூர் விபத்து வழக்கில் புதிய ட்விஸ்ட்…!!

டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…

6 மணத்தியாலங்கள் ago

BREAKING: தேர்வு முடிவுகள் வெளியானது… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…

6 மணத்தியாலங்கள் ago

“செருப்புகள் சிதறின.. மைக்குகள் மாயமானது!”.. பஞ்செட்டியில் விஜய்யின் மாஸ் எண்ட்ரி… ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை… தவெக தொண்டர்கள் ‘அலப்பறை…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…

6 மணத்தியாலங்கள் ago

“எழுதி வைத்துக்கொள்ளுங்கள், விஜய்தான் அடுத்த முதல்வர்”… அதிர வைக்கும் ஜோதிடர் ராதன் பண்டிட் கணிப்பு….!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…

6 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி… நக்கீரன் கணிப்பால் தவெக கூடாரமே காலி?… அதிர வைக்கும் ரிப்போர்ட்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…

6 மணத்தியாலங்கள் ago

“ஹாலிவுட் லெவல் அனுபவம் இனி இந்தியாவிலே”… 456 இருக்கைகள், பிரம்மாண்ட ஸ்க்ரீன்… திருச்சியை அதிரவைக்கும் டால்பி சினிமா….!

திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…

6 மணத்தியாலங்கள் ago