தமிழ் சினிமாவில் 90களில் மிகப் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை சங்கீதா. பெரும்பாலும் குடும்ப பங்கான கதைகளை தேர்வு செய்து நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். இவர் முதன்முதலாக 1978 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக மலையாளத் திரை உலகில் அறிமுகமானார். பின்னர் தமிழில் ரத்தத்தின் ரத்தமே என்ற திரைப்படத்தில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து இதய வாசல், நாட்டுக்கொரு நல்லவன், வசந்த மலர்கள், சாமுண்டி, தாலாட்டு, கேப்டன் மகள், மகாநதி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். ஆனால் இந்த திரைப்படங்களை காட்டிலும் ஹீரோயின் என்ற அந்தஸ்தை பெற்றுக் கொடுத்த திரைப்படம் பூவே உனக்காக. விஜய் நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்தில் சங்கீதா மிகவும் அழகாக நடித்திருப்பார்.
இதற்கிடையில் இவர் 2000 ஆண்டு சரவணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு சினிமா உலகை விட்டு விலகி முழு நேரமும் குடும்பத்தை கவனித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகை சங்கீதா மகாநதி படம் குறித்து பேசியுள்ளார். அதாவது, மகாநதி படத்தில் கமலின் மகளாக மகாநதி ஷோபனா நடித்திருந்தார். ஆடிஷனில் ஷோபனா தான் தேர்வாகியிருந்தாங்க. ஆனால் அவங்களை போல இருக்கும் ஒரு ஆள் தேவை என்பதால் என்னை தேர்வு செஞ்சாங்க. இந்த படத்துல கமலுக்கு மகளா நான் நடிச்சது நிறைய பேருக்கு தெரியாது “என்று கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய், சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.…
தபால் நிலையத்தின் 'கிசான் விகாஸ் பத்ரா' (KVP) திட்டம், முதலீட்டாளர்களின் பணத்தை பாதுகாப்பாக இரட்டிப்பாக்க உதவும் ஒரு சிறந்த சேமிப்புத்…
புதுச்சேரி ஜிப்மர் (JIPMER) மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை (ENT) பிரிவில் காலியாக உள்ள 'திட்ட தொழில்நுட்ப உதவியாளர்' பணியிடத்திற்குத்…
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், குழந்தைகளை வெப்பத்திலிருந்து காக்க பெற்றோர்கள் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள் குறித்து மருத்துவர்கள்…
தற்கால டிஜிட்டல் உலகில் நீண்ட நேரம் அலைபேசி மற்றும் மடிக்கணினிகளைத் குனிந்து பார்ப்பதால் ஏற்படும் கழுத்து வலி, சாதாரணமான ஒன்றாகத்…
ஜோதிட சாஸ்திரப்படி வரும் மே 6, 2026 அன்று, புளூட்டோ கிரகம் (யமன்) தனது பாதையில் பின்னோக்கி நகரும் வக்ர…