இயக்குனர் நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா திரைப்படத்தில் காமெடி நடிகராக அறிமுகமானவர்தான் நடிகர் ரெடின் கிங்ஸ்லி. பாப் கட்டிங் செம்பட்டை முடியுடன் சராசரி உயரத்துக்கும் குறைவான உயரம் கொண்ட மனிதராக மாமு வேற மாதிரி ஆகிடும் என்று சவுண்டு விட்டபடி நடித்த இவர் முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்திலும் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படத்திலும் இவர் நடித்து அசத்து இருந்தார். தற்போது பல திரைப்படங்களில் பிசியாக நடித்து வரும் இவ்வாறு சில மாதங்களுக்கு முன்பு சீரியல் நடிகை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சினிமாவில் காமெடி பீசாக பலரால் பார்த்து ரசிக்கப்படும் இவர் உண்மையில் மிகப் பெரிய கோடீஸ்வரர். தமிழக அரசு நடத்தக்கூடிய பொருட்காட்சிகளை விட அதிக பொருட்காட்சிகளை நடத்தி கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டுகிறார். பொருட்காட்சி ஒப்பந்ததாரரான இவருக்கு கீழ் 300-க்கும் மேற்பட்டோர் பணி செய்கின்றனர் என்றால் பலராலும் இதனை நம்ப முடியாது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பொருட்காட்சிகளை நடத்தி வருகின்றார். இந்நிலையில் ரெடின் கிங்ஸ்லி தனது மனைவி சங்கீதாவுடன் பிரபல யூட்யூப் சேனலுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய சங்கீதா, இவரைப் பார்த்தா யாருக்குமே ஒரு சீரியசான பர்சன் மாதிரி நினைப்பு வராது. இவர் எப்படி ஒரு குடும்பம் நடத்துவாரு எப்படி வாழ்க்கையை ஓட்டுவார் என்று தான் தோணும். இவர் முழுக்க முழுக்க பேச்சுலராவே இருந்துட்டாரு. சினிமாவுல மட்டும்தான் அவருடைய இன்ட்ரஸ்ட்டா காட்டுவாரு. எதுக்காகவும் ஒரு பெரிய ரிஸ்க் எடுக்க மாட்டாரு. என்கிட்ட பேசும்போது கூட இரண்டாவது முறை பேசும்போதே கல்யாணம் பண்ணிக்கலாமுன்னு கேட்டுட்டாரு. எப்படி ஒருத்தர் இரண்டு டைம் பேசிட்டு உடனே கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு எடுத்திருக்க முடியும் என்னால் முடியாதுன்னு நான் இப்போ சொல்லிட்டேன்.
அப்புறம் கூட இவர் பெருசா எதுவும் ரிஸ்க் எடுக்கல வாரத்துல ஒரு நாள் பேசுவார் பத்து நாளைக்கு ஒரு டைம் மீட் பண்ணுவாரு. இவர் விட்ட இடைவெளியால் தான் இவர் முழுசா புரிஞ்சுக்க எனக்கு இரண்டு வருஷம் ஆயிடுச்சு. அதே சமயம் எங்க அப்பா இறந்து விட்டதால் அவருடைய இடத்தை இவரால தான் நிரப்ப முடியும் என்று உணர்ந்த பிறகு தான் இவரை திருமணம் செய்து கொண்டேன் என்று சங்கீதா பேசியுள்ளார்.
திமுகவின் அசைக்க முடியாத கோட்டையாகக் கருதப்பட்ட கொளத்தூர் தொகுதியில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்த எதிர்பாராத தோல்வி தமிழக அரசியல்…
சமீபத்தில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.…
தமிழ்நாட்டுத் தேர்தல் களத்தில் நிலவும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகப் பிரிவுத் தலைவர் ஆனந்த்…
35 வயதான ஒரு நபர், தனது 11 ஆண்டுகால கார்ப்பரேட் வாழ்க்கையைத் துறந்து, வாழ்க்கைத் தேர்வுகளை மறுபரிசீலனை செய்துள்ளார். பல…
தமிழக அரசியலில் தற்போதைய பரபரப்பான சூழலில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன் தனது முகநூல் பதிவின் மூலம்…
ராஜஸ்தான் பணியாளர் தேர்வு வாரியம் (RSMSSB) தற்போது காலியாக உள்ள 3,540 டீச்சிங் அசோசியேட் (Teaching Associate) பணியிடங்களை நிரப்புவதற்கான…