தமிழ் சினிமாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு நெருங்கி வா முத்தமிடாதே என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர்தான் சஞ்சனா நடராஜன். இறுதிச்சுற்று திரைப்படத்தில் ரித்திகா சிங் உடன் பாக்சிங் மாணவியாக நடித்திருந்தார். அதன் பிறகு ஹிந்தி மற்றும் தெலுங்கு வெர்ஷனில் வெளியான இந்த படத்திலும் இவர்தான் நடித்திருந்தார். 2018 ஆம் ஆண்டு வெளியான விஜய் தேவரகொண்டாவின் நோட்டா திரைப்படத்தில் இவர் அரசியல்வாதியாக நடித்திருந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.0, கேம் ஓவர், ஜகமே தந்திரம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டு நடித்துள்ளார். சார் பட்டா பரம்பரை திரைப்படத்தில் லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவர் மலையாளத்தில் டியர் ஃப்ரெண்ட் என்ற திரைப்படத்தில் நடித்தார்.
இறுதியாக எஸ் ஜே சூர்யாவுக்கு ஜோடியாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து குரு சோமசுந்தரம் நடிப்பில் வெளியான பாட்டில் ராதா திரைப்படத்தில் தனது அற்புதமான நடிப்பை இவர் வெளிப்படுத்தியுள்ளார். இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படி சினிமாவில் பிஸியாக இருக்கும் சஞ்சனா நடராஜன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்வது வழக்கம். இதற்கு தொடர்ந்து பலரும் விமர்சனம் செய்து வந்த நிலையில் விமர்சனங்களுக்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக சஞ்சனா நடராஜன் சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.
அதில், ஒருத்தர் நான் அழகாக இருக்க வேண்டும் என்று சொல்வதற்காக ஒரு போஸ்ட் போடுவது எவ்வளவு தப்போ, அதே மாதிரி தான் ஒருத்தர் என்னை தவறாக விமர்சனம் செய்து விடுவார்கள் என்பதற்காக நான் என் புகைப்படங்களை பகிராமல் இருப்பது தவறு. நான் இப்படி புகைப்படங்கள் வெளியிடுவதால் அது என்னையும் பாதிக்கவில்லை என்னை சார்ந்தவர்களையும் பாதிக்கவில்லை என்றால் நான் எதற்காக அதற்கு பயப்பட வேண்டும். ஒருத்தர் என்ன பத்தி தவறா பேசுகிறார்கள் என்பதற்காக நான் போஸ்ட் போடாமல் இருக்க முடியாது. சினிமா வாய்ப்புக்காக இப்படி கிளாமரில் இறங்கிட்டாங்க என்று நிறைய பேர் எழுதுறாங்க. சினிமாவுல நடிச்சு எனக்கு கிடைக்காத வாய்ப்பு இப்படி போட்டோ போட்டு கிடைக்கப் போகுது என்று அவங்க நினைச்சா அது தப்பு.
அதையும் மீறி அவங்க எழுதுறாங்கனா எழுதிக்கிட்டு போகட்டும். எனக்கு ஒரு போஸ்ட் போடக்கூடாது என்று தோணுனா தான் நான் போடாம இருப்பேன். மத்தவங்க பேசுறாங்கன்னு என்னால போஸ்ட் போடாம இருக்க முடியாது. நான் பிகினி உடையில் போட்டோ போடுகிறேன் என்றால் அதனை என்ன தப்பு இருக்கு. ஒரு போட்டோவை நான் போஸ்ட் போடுறதுக்கு முன்னாடி அதை நான் பார்த்ததுக்கு அப்புறம் தான் போடுவேன். அதுல ஏதாவது இருந்தா நான் பார்த்திருக்க மாட்டேனா. எனக்கு பிடிச்சிருக்கு நான் போடுறேன். இன்னொருதங்க வெறுக்கிறார்கள் என்பதற்காக நான் போஸ்ட் போடாமல் இருக்க முடியாது. எங்க அப்பா அம்மாவுக்கு என்னோட பேஸ் புடிச்சிருக்கு. நாம் போடுற புகைப்படத்தில் இருப்பது என்னோட முகம் தான். நான் இது மாதிரி போஸ்ட் போட தயங்கல என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.
கேரள மாநிலம் குரவிலங்காடு பகுதியில், இருசக்கர வாகனத்தில் பயணித்த பாஸ்டர் ஜோமன் மேத்யூ மற்றும் அவரது மனைவி பாபிதா ஆகியோர்…
கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சிவமொக்கா தேர்வு மையத்தில், பட்டம் மற்றும் முதுகலைத் தேர்வு எழுதிய மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகப்…
சமூக வலைதளங்களில் நாள்தோறும் எத்தனையோ விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் செய்திகள் வைரலாகி வந்தாலும், தற்போது உலக நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான…
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் முன்னாள் பாஜக மாவட்டத் தலைவர் தேவராஜ் சிங்கின் சொகுசு ஆடி கார் மோதி, மனோஜ்…
நியூயார்க்கின் ஆல்பனி நகரில் வசித்து வந்த தெலங்கானாவைச் சேர்ந்த 25 வயதுப் பெண் நல்லமலா அக்ஷிதா, மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக…
தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம் மத்தூர் பகுதியில், 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 3…