Categories: CINEMA

தி மார்வெல்ஸ் நிகழ்ச்சியில் வேற லெவலில் பங்கேற்ற சமந்தா – இனி ஹாலிவுட் ரேஞ்சில் அலப்பரை கௌப்ப போறாங்க…

ஹைதராபாத்தில் நடந்த தி மார்வெல்ஸ் நிகழ்வில், நடிகை சமந்தா கெத்தாக கலந்துக்கொண்டார். தி மார்வெல்ஸ் படத்தின் விளம்பர நிகழ்வில் அவர் பங்கேற்று, போட்டோஷூட்டுக்கு பலவிதமான போஸ் கொடுத்தார். இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவரான சமந்தா, உடல்நல பாதிப்பு காரணமாக ஓய்வில் இருந்து வருகிறார். ஹைதராபாத்தில் இன்று காலை நடந்த தி மார்வெல்ஸ் திரைப்படத்தின் விளம்பர நிகழ்வில் பங்கேற்ற சமந்தா, நீல நிற டெனிம் ஜீன்ஸ் மற்றும் வெள்ளை நிற க்ராப் டாப் உடன் சாதாரண கருப்பு கோட் அணிந்து, மிக அழகாக காணப்பட்டார்.தி மார்வெல்ஸ் திரைப்படம், நியா டகோஸ்டா இயக்கத்தில் வெளிவருகிறது. இப்படத்தில் ப்ரி லார்சன், இமான் வெல்லானி, டெயோனா பாரிஸ், ஜாவே ஆஷ்டன் மற்றும் சாமுவேல் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் மூன்று முன்னணி கதாபாத்திரங்கள் பேசப்படும் வகையில் உருவாக்கப் பட்டுள்ளது. இப்படம் இந்தியாவில் நவம்பர் 10ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தில் தெலுங்கு, தமிழ் வெர்சன்களுக்கு சமந்தா பின்னணி குரல் கொடுத்திருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.

சமந்தா கடைசியாக சிவ நிர்வாணா இயக்கிய குஷி என்ற காதல் படத்தில் நடித்தார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக விஜய் தேவரகொண்டா நடித்தார், மேலும் சச்சின் கேத்கர், ஜெயராம், சரண்யா பொன்வண்ணன், முரளி ஷர்மா மற்றும் ராஷ்மி போன்றவர்களும் நடித்திருந்தனர். சமந்தா அடுத்ததாக ராஜ் அண்ட் டிகே இயக்கிய Citadel என்ற சீரிஸில் இந்தியப் பதிப்பில் நடிக்கிறார். சிட்டாடல் படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக வருண் தவான் நடிக்கிறார். ஆக, ஹாலிவுட் ரேஞ்சில் சமந்தா இனி அலப்பரை கௌப்ப தயாராகி வருவதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உ.ள்ளனர்.

Sumathi
Sumathi

Recent Posts

சன் டிவியில் மலர் சீரியல் இருந்து விலகிய ப்ரீத்தி ஷர்மா.. தொடரிலிருந்து வெளியேறியது குறித்து அவர் போட்ட முதல் பதிவு..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் சீரியலில் இருந்து நடிகை ப்ரீத்தி வெளியேறி இருக்கின்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

16 நிமிடங்கள் ago

ஹச் வினோத் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்.. அவர் போட்டிருக்க கண்டிஷனை பார்த்தா இப்போதைக்கு நடக்காது போலையே…

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…

49 நிமிடங்கள் ago

6 நாளில், ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தை ஓரங்கட்டிய கல்கி 2898 AD.. மொத்தம் எத்தனை கோடி வசூல் தெரியுமா..?

கடந்த ஆறு நாட்களில் கல்கி திரைப்படம் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு…

2 மணி நேரங்கள் ago

நெப்போலியனின் மூத்த மகன் தனுஷின் திருமணம்.. முதல்வரை சந்தித்து நிச்சயதார்த்த அழைப்பிதழை வழங்கிய வைரல் போட்டோஸ்..!

நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

3 மணி நேரங்கள் ago

ஆபரேஷன் முடிந்ததும் காதல் மனைவியை சந்தித்த அஜித்.. மனைவி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க..

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் நடைபெற்று இருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அஜர்பைஜானில் இருந்து அவசரம் அவசரமாக சென்னை…

4 மணி நேரங்கள் ago

விஜய பாக்கறதுக்காகவே படிச்சேன்.. இது எங்க அம்மாவோட பல வருட ஆசை.. விருது வழங்கும் விழாவில் மகளும், தாயும் மகிழ்ச்சி பேட்டி..!

நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் நடிகர் விஜய்யை பார்ப்பதற்காகவே கஷ்டப்பட்டு படித்தேன் என்று…

5 மணி நேரங்கள் ago