தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தற்பொழுது இந்திய அளவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டுள்ளார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இவர் நடிப்பில் வெளிவந்த ‘யசோதா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது.
இதை தொடர்ந்து நடிகை சமந்தாவின் நடிப்பில் இறுதியாக ‘சகுந்தலம் ‘ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சங்களையே பெற்றது. தற்போது இவர் விஜய் தேவர் கொண்டா உடன் இணைந்து ‘குஷி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஹிந்தியில் வெப் சீரியஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார் நடிகை சமந்தா.
‘குஷி’ திரைப்படத்தை தொடர்ந்து சமந்தா நடிப்பை விட்டு விலக இருப்பதாக ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது கடந்த ஒரு வருடம் ஆகவே சமந்தா மையோ சிட்டிஷ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு வருவதால் அவர் தீவிர சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்துள்ளார்.
ஒரு வருடத்திற்கு மேலாக சினிமாவை விட்டு விலக முடிவு எடுத்திருக்கும் சமந்தா தற்போது மன நிம்மதிக்காக தனக்கு பிடித்த விஷயங்களை செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் வேலூரில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ நாராயணி தங்க கோயில் சாமி தரிசனம் செய்தார்.அதை தொடர்ந்து கோவை ஈஷா மையத்திற்கு சென்றார்.
இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் வைரலானது. தற்பொழுது நடிகை சமந்தா ஆன்மிக பயணத்தை முடித்துவிட்டு ஜாலியாக பாலி தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். தற்பொழுது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…