தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை ஷகீலா. முதலில் மற்ற நடிகைகளை போலவே சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். ஒரு சில சூழ்நிலை காரணங்களால் கிளாமர் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இதைத் தொடர்ந்து கிளாமர் குயினாக வலம் வந்தார் ஷகீலா. சினிமா உலகில் சில்க் ஸ்மிதாவுக்கு பிறகு கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஷகிலா. ஷகிலா பெயர் சொன்னால் போதும் அனைத்து ரசிகர்களும் குஷியாகி விடுவார்கள்.
இவர் முதலில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தது மலையாள மொழி படங்களில் தான். அதனாலேயே இவருக்கு கேரளாவில் அதிக ரசிகர்கள் உள்ளார்கள். இவருடைய கவர்ச்சி படங்களுக்கு ரசிகர்கள் மயங்காதவர்கள் இருக்க மாட்டார். மேலும், ஷகீலா தனது வாழ்கை வரலாற்றை படமாகவும் எடுத்துள்ளார். மேலும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் ஷகிலா என்பவருக்கு இருந்த பிம்பத்தை முற்றிலுமாக உடைத்தெறிந்துள்ளார்.
இத்தனை நாட்கள் அவரை ஒரு கவர்ச்சி பொருளாக மட்டுமே பார்த்து வந்தவர்கள் கூட அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவரை ஒரு தாயாக பார்க்கும் அளவிற்கு மாற்றினார் நடிகை ஷகீலா. சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்று ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது, ‘நான் 13 வயதில் இருந்தே சம்பாதிக்கிறேன் என்பதால் ஒருவித திமிர் வந்துவிட்டது.
இதனால் எனக்கு இன்னொரு துணை வேண்டாம் என்று முடிவு எடுத்தேன். அதோடு எனக்கு மது மற்றும் புகைப்பழக்கம் உள்ளது. முதலில் சாதாரணமாக ஆரம்பித்த இந்த பழக்கம் மது இல்லாமல் தூங்கவே முடியாது என்ற அளவிற்கு ஆனது. இந்த பழக்கத்தை வைத்துக்கொண்டு இன்னொருவரை திருமணம் செய்து அவரது வாழ்க்கையை கெடுக்க வேண்டாம் என்பதாலேயே திருமணம் வேண்டாம்’ என்ற முடிவை எடுத்து விட்டேன் என்று கூறியுள்ளார். இதுக்கு பின்னாடி இப்படி ஒரு விஷயம் இருக்கா? என அவரது ரசிகர்கள் தற்பொழுது கூறி வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலத்தில் பட்டப்பகலில் தனது சிறிய மகளுடன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நபரை மர்ம கும்பல் ஒன்று காரில்…
மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் கான்ஸ்டபிளைக் கார் ஒன்றில் அடித்து, போனட்டில் வைத்து 200…
வெளியாகியுள்ள அரசியல் செய்தித் தகவல்களின்படி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பதவியேற்று ஆறு மாதங்களை நிறைவு செய்துள்ள…
தமிழக முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்ததால் காலியாகியுள்ள திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல் களம் தற்போதைய அரசியலில் பெரும்…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி மற்றும் நடுப்பட்டு கிராம எல்லையில் வசிக்கும் கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி…
தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், உள்ளாட்சித் தேர்தலைத் தற்போதைக்கு நடத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதாகத் தமிழக அரசு…