பிரேமம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சாய் பல்லவி, இந்தப் படத்தின் மூலம் அதிக ரசிகர்களை சாய்பல்லவி பெற்றாள். இவருக்கு பூஜா கண்ணன் என்ற தங்கை இருக்கிறாள், தற்போது அவர் தனது காதலனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிமுகம் செய்துள்ளார். இந்த போட்டோ வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
நடிகை சாய் பல்லவி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்ட இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் படங்களில் நடிக்க தொடங்கினார். தனது நடிப்பு திறமையால் மட்டுமே அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தன. மேலும் கவர்ச்சியே இல்லாமல் நடித்து 2k கிட்ஸ் மனதில் இடத்தை பிடித்தார்.
தமிழில் சூர்யா தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ள சாய் பல்லவி, சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான கார்த்தி திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், சிவகார்த்திகேயன் எஸ்கே 21 படத்திலும்; தண்டல் என்ற தெலுங்கு படத்திலும் சாய் பல்லவி நடித்து வருகிறார். சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் எல்ஏஎல் விஜய் இயக்கத்தில் வெளியான சித்திரை வானம் படத்தின் மூலம் அறிமுகமானார்.
இவர் தனது அக்காவை போலவே தொடர்ந்து படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் ஒரே படத்துடன் சினிமாவில் இருந்து விலகிக் கொண்டார். இருப்பினும் பூஜா கண்ணன் தொடர்ந்து சமூக வலைதளங்களில் போட்டோக்களையும் வீடியோக்களையும் தனது வாழ்வின் முக்கிய நிகழ்வுகளையும் பர்சனல் விஷயங்களையும் பகிர்ந்து கொண்டே வந்துள்ளார்.
இந்த சூழலில் பூஜா கண்ணன் தனது காதலனை இன்ஸ்டாகிராமில் அறிமுகம் செய்துள்ளார். இதுவரை தனது க்ரைம் பார்ட்னராக இருந்த வினித் விரைவில் லவ் பார்ட்னராக மாற உள்ளதாக பூஜா கண்ணன் தெரிவித்துள்ளார். மேலும் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை வீடியோக்களையும் அவர் பகிர்ந்து உள்ளார், சமூக வலைதளங்களில் இந்த போட்டோவுக்கு லைக்ஸ்கள் கமெண்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இவர்கள் விரைவில் திருமணம் செய்தியை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1991-ம் ஆண்டு அக்டோபர் மாதம், கலிபோர்னியாவின் ஹண்டிங்டன் பீச்சில் உள்ள ஒரு விடுதியில் 56 வயதான விமானி பில் நெல்சனை,…
இன்று, ஏப்ரல் 22, 2026 அன்று, ஜோதிட உலகின் மிக முக்கிய நிகழ்வாக சனி பகவான் மீன ராசியில் 'உதயம்'…
செங்கல்பட்டு மாவட்டம் சேலையூர் பகுதியில் வசித்து வரும் கட்டிடத் தொழிலாளி தம்பதியினரின் 16 வயது மகள் காவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).…
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், தன்னைத் தொடர்ந்து மிரட்டி வந்த முன்னாள் காதலனை இளம்பெண் ஒருவர் ஓட்டல் அறைக்குள் வைத்து…
பெண் அரசியல்வாதிகள் குறித்துப் பீகார் மாநிலம் பூர்ணியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பப்பு யாதவ் தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கள் நாடு…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் நாளை புதன்கிழமையுடன் முடிவுக்கு வரும் நிலையில், மத்திய கிழக்கில்…