தமிழ், மலையாள மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய்பல்லவி. கடந்த 2015 ஆம் ஆண்டு நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பட்டித் தொட்டி எல்லாம் பிரபலமானார் சாய் பல்லவி. என்றும் பலர் அவரை மலர் டீச்சர் என்று தான் கூப்பிடுகிறார்கள். அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து வருகிறார்.
இவர் தமிழில் தியா படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமாகி தனுஷ் மற்றும் சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடிக்க தொடங்கினார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான கார்கி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் சாய்பல்லவி தற்போது பாலிவுட்டில் அறிமுகமாகிறார். அதுவும் பாலிவுட்டில் சூப்பர் ஸ்டார் அமீர்கானின் மகன் ஜூனைத் கானுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.
இந்த நிலையில் சாய்பல்லவி மற்றும் இயக்குனர் ராஜ்குமார் இருவரும் மாலையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அவர்களுக்கு திருமணம் நடந்து விட்டதாக இணையத்தில் வதந்தி பரவியது. இந்த புகைப்படம் வைரலான நிலையில் உண்மையில் அது SK 21 திரைப்படத்தின் பூஜை படங்கள் என்பது தெரிய வந்துள்ளது.இந்த நிலையில் நடிகை சாய் பல்லவி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
அந்த பதிவில், நான் வதந்திகளை எப்போதும் கண்டு கொள்வதில்லை அது பற்றி கவலைப்படுவதும் கிடையாது. ஆனால் அந்த வதந்தி குடும்ப நண்பர்களை உள்ளடக்கி இருந்தால் கட்டாயம் அதை பற்றி நான் பேச வேண்டும். படப்பிடிப்பின் பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வேண்டும் என்று பணத்திற்காக கேவலமாக பரப்பி வருகிறார்கள். இதற்கு விளக்கம் அளிப்பது வேதனையாக இருக்கிறது என்று சாய் பல்லவி பதிவிட்டுடன் நிலையில் அந்த பதிவு வைரலாகி வருகிறது.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்', தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைத்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் களம் பரபரப்பாக நகர்ந்து வரும் வேளையில், அதிமுகவில் உட்கட்சி ஒழுங்கு நடவடிக்கை…
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக ஜூலை 10ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். கடந்த…
மத்திய அரசுடன் கொள்கை ரீதியாக மாறுபட்டாலும், மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் நிர்வாக நலனைக் கருத்தில் கொண்டு டெல்லியுடன் மோதல் போக்கைக்…
ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அலி கமேனியின் இறுதிச் சடங்கு, பல்வேறு அரசியல் மற்றும் ராணுவ நெருக்கடிகளுக்கு மத்தியில் நாட்டின்…
இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது திமுக அமைச்சர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.…