தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. இயக்குநர் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில், பிரஷாந்த்தின் ஜோடியாக ‘செம்பருத்தி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அவர் நடித்த படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
நடிகை ரோஜா இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். முதலில் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்த ரோஜா, 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.
இதனைத் தொடர்ந்து ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட ரோஜா 2014 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் நகரி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாகத் தேர்வானார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2019 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் நகரி தொகுதியில் வெற்றி பெற்ற ரோஜாவுக்கு சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறை அமைச்சர் பொறுப்பை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வழங்கினார்.
தற்பொழுது நடிகை ரோஜா தன் மகன் மற்றும் மகளுடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நடிகை ரோஜாவின் மகளா இது? ஹீரோயின் போல இருக்காங்களே என்று ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
சோச்சா நகரில் அமைந்துள்ள ஜார்டின் மைபோரே குடியிருப்புப் பகுதியில் நிகழ்ந்த கொடூரமான தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் ஜகத்புரா பகுதியில் அமைந்திருக்கும் அக்ஷய பாத்ரா கோயில் சுற்றுவட்டாரத்தில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நேரத்தில் கடுமையான பரபரப்பு…
காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்குச் சென்ற 9 மீனவர்கள் உயிரிழந்த செய்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் பெரும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.…
உத்தரப் பிரதேசத்தின் மகோபா பகுதியில் ஆண் வாரிசு பிறக்கவில்லை என்ற காரணத்திற்காகக் குடும்பத்தினர் கொடுத்த தொடர் மன உளைச்சல், ஒரு…
மதுரை தமிழக வெற்றி வேட்கை மற்றும் அரசியல் களத்தில், தவெக உட்கட்சி அமைப்பில் கோஷ்டி பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாக அதிரடி…
தமிழக நகராட்சி நிர்வாகத்துறை முன்னாள் அமைச்சராக இருந்த K.N. நேருவுக்கு எதிரான ரூ.634 கோடி பணி நியமன ஊழல் புகாரில்,…