தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்தான் நடிகை ரேணுகா மேனன். கடந்த 2005 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியான காலபக் காதலன் திரைப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
ரேணுகா மேனன் 2002 ஆம் ஆண்டில் மலையாளத்தில் வெளிவந்த நம்மள் என்ற திரைப்படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகமானார். இவர் தமிழில் முதன்முதலில் பிப்ரவரி 14 படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பிறகு இவர் நடித்த திரைப்படம் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த தாஸ் தான். அதன் பிறகு தான் ஆர்யாவின் கலாபக் காதலன் திரைப்படத்தில் நடித்தார்.
பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்த ரேணுகா மேனன் 2006 ஆம் ஆண்டு சுராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிவிட்டார். இதனைத் தொடர்ந்து 2006 ஆம் ஆண்டிற்கு பிறகு ரேணுகா மேனன் எந்த படங்களிலும் நடிக்கவில்லை. திருமணத்திற்குப் பிறகு குடும்பம் மற்றும் குழந்தைகள் என மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
கடந்த 14 ஆண்டுகளாக குடும்பத்துடன் கலிபோர்னியாவில் வசித்து வரும் ரேணுகா அங்கேயே ஒரு நடன பள்ளியை நடத்தி வருகிறார். நடிப்பில் பெரிய அளவு ஆர்வம் இல்லாத ரேணுகாவிற்கு வெளிநாட்டிற்கு சென்று மேற்படிப்பு படிக்க வேண்டும் என்பது தான் ஆசையாக இருந்துள்ளது. தன்னுடைய கனவை திருமணத்திற்கு பிறகு நிறைவேற்றி கொண்டார்.
ரேணுகா மேனன் மற்றும் சுராஜ் தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ரேணுகா மேனன் மகள்கள் இருவரும் அம்மா ரேஞ்சுக்கு வளர்ந்து நிற்கின்றனர். தன் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை ரேணுகா மேனன் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவருக்கு இவ்வளவு பெரிய மகள்களாக என ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க…
கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…
வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…
சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…