தமிழ் சினிமாவில் டப்பிங் கலைஞராக இருப்பவர் ரவீனா ரவி. திரைப்பட நடிகையாகவும் உள்ளார். ஒரு கிடாயின் கருணை மனு என்ற படத்தில் நடிகர் வித்தாத்துக்கு ஜோடியாக கதாநாயகியாக ரவீனா ரவி அறிமுகமானார். தொடர்ந்து வீரமே வாகை சூடும் லவ்டுடே மாமன்னன் உள்ளிட்ட பல படங்களில் ரவீனா ரவி நடித்திருக்கிறார். இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக தன்னையும் தனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் சில மர்ம நபர்கள் தொந்தரவு செய்வதாக ரவீனா ரவி புகார் தெரிவித்துள்ளார்.
சபரீஷ் என்பவரும் அவரது சகோதரர்களும் தொடர்ந்து தன்னையும் தனது குடும்பத்தினரையும் ஆன்லைனில் துன்புறுத்தி வருகிறார்கள். அருவருப்பான குறுஞ்செய்திகளை அனுப்புகிறார்கள். இது எங்களை பெரிய அளவில் பாதித்துள்ளது. இதுகுறித்து சட்டபூர்வ நடவடிக்கை எடுத்தும் அவர்கள் தொந்தரவு இன்னும் குறையவில்லை. மீண்டும் மீண்டும் புதிய சமூக வலைதள கணக்குகள் தொடங்கி எங்களை தொடர்பு கொண்டு வருகின்றனர்.
சென்னை பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் என்று சொல்லப்படும் நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள நடிகை ரவீனா ரவி, தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் சென்னை சைபர் கிரைம் போலீஸ்க்கும் இந்த புகாரை டேக் செய்துள்ளார். ஒரு நடிகையின் இந்த புகார் மனு இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…