விஜய் தொலைக்காட்சியில் படு பிரம்மாண்டமாக பிக்பாஸ் 7வது சீசன் தொடங்க இருக்கிறது. செப்டம்பர் மாத இறுதி அல்லது அக்டோபர் 2வது வாரத்தில் நிகழ்ச்சி தொடங்கலாம் என்கின்றனர். இப்போதைக்கு நிகழ்ச்சி விரைவில் வருகிறது, காத்திருங்கள் என சூப்பரான புரொமோக்கள் வெளியாகி வருகின்றன.
இரண்டு வீடு இந்த முறை புதியதாக வருகிறது அதோடு வேறென்ன விஷயங்கள் புதியதாக வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 6வது சீசனிற்கு ரூ. 70 கோடி வரை சம்பளம் வாங்கி கமல்ஹாசன் இந்த முறை ரூ. 130 கோடிக்கு சம்பளம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. எனவே பிக்பாஸ் 7வது படு பிரம்மாண்டமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தற்பொழுது இந்த சீசனில் பங்குபெறவுள்ள போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் தான் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதுவரை பிக்பாஸ் 7வது சீசனில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் என நிறைய பிரபலங்களின் பெயர்கள் அடிபடுகிறது. ஆனால் யார் உறுதியாக வருவார்கள் என தெரியவில்லை.
இந்த நேரத்தில் தான் விஜய் தொலைக்காட்சியின் மௌன ராகம் 2 தொடர் புகழ் ரவீனா பிக்பாஸ் 7வது சீசனில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. பிக் பாஸ் வீடு என்றால் கண்டிப்பாக காதல் கிசுகிசு இருக்கும். ஒவ்வொரு சீசனும் தவறாமல் இது நடந்து கொண்டுதான் வருகிறது. தற்பொழுது 19 வயதான நடிகை ரவீனா மட்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தால் கண்டிப்பாக காதல் கிசுகிசுவில் சிக்குவார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…