தெலுங்கில் வெளியான ‘கீதா கோவிந்தம்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில்பிரபலமானவர்தான் நடிகை ரஷ்மிகா மந்தனா. இவரை ரசிகர்கள் அனைவரும் நேஷனல் கிரஷ் என்று கொண்டாடுகிறார்கள். சினிமாவிற்கு முன்பு மாடலிங்கில் இருந்த இவர் தற்பொழுது தெலுங்கு, தமிழ், ஹிந்தி என பல மொழி படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர் நடித்த ஸ்ரீவல்லி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இவர் தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘சுல்தான்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து தளபதி விஜய்க்கு ஜோடியாக ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்து அசத்தினார். இதைத்தொடர்ந்து தற்பொழுது இவர் தனுஷ் நடிப்பில் உருவாகும் படத்தில் கதாநாயகியாக கமிட்டாகியுள்ளார்.
இப்படி தமிழ் ,ஹிந்தி என பிசியாக நடித்து வருகிறார் நடிகை ரஷ்மிகா. இவர் சமீபத்தில் அமிதாப் பச்சனுடன் இணைந்து Goodbye எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து தற்போது சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் உடன் ‘அனிமேல்’ எனும் ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ரஷ்மிகா மந்தனா தற்பொழுது ‘THE GIRL FRIEND’ புதிய திரைப்படமொன்றில் கமிட்டாகியுள்ளார். இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட சமீபத்தில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் மும்பையில் அம்பானியின் Jio World Plaza திறப்பு விழாவில் பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டனர். நடிகை ரஷ்மிகாவும் இந்த விழாவில் மிகவும் குட்டையான ஷார்ட் உடையில் கிளாமராக கலந்து கொண்டுள்ளார். இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…