#image_title
ரம்யா கிருஷ்ணன் இந்தியாவின் பிரபலமான நடிகை ஆவார். சென்னையில் பிறந்து வளர்ந்தவர் ரம்யா கிருஷ்ணன். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் ரம்யா கிருஷ்ணன். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜ்யசபா சோ ராமசாமி அவர்களின் மருமகள் தான் ரம்யா கிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடி ஆகியவற்றை முறையாக கற்று தேர்ந்தவர்.
1985 ஆம் ஆண்டு வெள்ளை மனசு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ரம்யா கிருஷ்ணன். பின்னர் ரஜினிகாந்தின் படிக்காதவன் கமல்ஹாசன் நடித்த பெயர் சொல்லும் பிள்ளை போன்ற தமிழ் திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்தார் ரம்யா கிருஷ்ணன். ஆனாலும் 1980களில் இவர் தோல்வி நடிகையாகவே இருந்தார். எந்த ஒரு படமும் இவருக்கு கை கொடுக்கவே இல்லை.
பிறகு 1999 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த படையப்பா திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தார் ரம்யா கிருஷ்ணன். இந்த படம் அவரது கேரியரில் திருப்புமுனையாக அமைந்தது என்றே சொல்லலாம். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது மட்டுமல்லாமல் ரம்யா கிருஷ்ணன் மிகப் பிரபலம் அடைந்தார். அதற்கு அடுத்ததாக சினிமாவில் ஏறு முகத்தையே கண்ட ரம்யா கிருஷ்ணன் பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார்.
அம்மன் கடவுள் வேடங்கள் இவருக்கு பொருத்தமாக இருந்ததால் ராஜகாளியம்மன் நாகேஸ்வரி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அன்னை காளிகாம்பாள் உள்ளிட்ட பல பக்தி திரைப்படங்களில் அம்மன் வேடங்களில் நடித்தார் ரம்யா கிருஷ்ணன். இதனால் பெண்களின் ஆதரவை பெற்றார். இது மட்டுமில்லாமல் சின்னத்திரை தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும் இருந்திருக்கிறார் ரம்யா கிருஷ்ணன். சமீபத்தில் மாபெரும் வெற்றி பெற்ற பாகுபலி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமான ராஜ மாதா கதாபாத்திரத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமான ரம்யா கிருஷ்ணன் 2003 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்பட இயக்குன கிருஷ்ண வம்சியை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.
தற்போது ரம்யா கிருஷ்ணன் தனது கணவருடன் வாழவில்லை விவாகரத்து செய்து விட்டார் என்று வதந்திகள் பரவி வந்த நிலையில் அவரது கணவர் கிருஷ்ண வம்சி இதற்கு பதில் அளித்து இருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால் ஷூட்டிங் காக நான் ஹைதராபாத்தில் இருக்கிறேன் ரம்யா கிருஷ்ணன் சென்னையில் இருக்கிறார் நாங்கள் இருவரும் வேறு இடத்தில் இருந்ததால் இந்த மாதிரி வதந்தியை பரப்பி இருக்கிறார்கள். இதில் எந்த உண்மை தன்மையும் இல்லை. நாங்கள் தனிப்பட்ட முறையில் குடும்பங்கள் நண்பர்கள் விழாவிற்கு சென்று தான் வருகிறோம். புகைப்படத்தை வெளியிட எங்களுக்கு விருப்பமில்லை அதனால் வெளியிடவில்லை. அதனால் நாங்கள் விவாகரத்து செய்யவில்லை என்று ஓபனாக பேசியிருக்கிறார் ரம்யா கிருஷ்ணனின் கணவரும் இயக்குனருமான கிருஷ்ண வம்சி.
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…