Categories: சினிமா

ஆன்மீகவாதியாக மாறிய ஜேஜே பட நடிகை.. வெளிவந்த புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!

Spread the love

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் ஒரு சில திரைப்படங்களுக்கு பிறகு திரையில் ஜொலிக்காமல் போய்விடுகின்றனர். அதன்படி கடந்த 2003 ஆம் ஆண்டு சரண் இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான ஜேஜே என்ற திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை பிரியங்கா கோத்தாரி. இந்த திரைப்படத்தில் தமிழ் பேசும் மேற்கு வங்கத்து பெண்ணாக அவர் நடித்திருப்பார். ஆனால் அவர் நிஜத்திலேயே மேற்கு வங்கத்தில் பிறந்தவர் தான். இந்தத் திரைப்படம் வெளியானபோது இவர் தேவயானி சாயலில் இருப்பதாக பல விமர்சனங்களும் எழுந்தன.

தற்போதும் கூட தேடித்தேடி தீர்ப்போமா, உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே என்ற பாடல்கள் கேட்டால் ரசிகர்களின் நினைவுக்கு வருவது இவர்தான். தொடர்ந்து தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழி திரைப்படங்களில் பிசியாக நடித்தார். ஆனாலும் இவர் நடித்த படங்கள் எதுவும் ரசிகர்களின் மனதில் நிற்கவில்லை. ஜேஜே படத்தில் மாதவன் 100 ரூபாய் நோட்டை தேடி அலைவதுபோல பிரியங்கா கோத்தாரியை தமிழ் திரை உலகில் தேட வேண்டியதாக இருந்தது.

அந்தத் திரைப்படம் இவருடைய சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தாலும் அதன் பிறகு இவருக்கு பெரிதாக எதுவும் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இறுதியாக ஜீவாவின் கச்சேரி ஆரம்பம் திரைப்படத்தில் வாடா வாடா பையா என பாடலுக்கு நடனமாட இருந்தார். அதன் பிறகு இவர் காணாமல் போய்விட்டார். தற்போது இவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ஈஷா பவுண்டேஷனின் ஃபவுண்டராக இவர் மாறியுள்ளார். முற்றிலும் ஆன்மீக வழியில் சென்றுள்ளார். அது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அதை இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Nanthini

Recent Posts

“அய்யோ காப்பாத்துங்க..!” அதிவேகத்தில் வந்த கார்… நடுரோட்டில் அலறல் சத்தம்… கல்லூரி மாணவிகளுக்கு நேர்ந்த கொடூரம்…!!

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு கல்லூரி மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். பொத்தேரியில் உள்ள தனியார்…

38 seconds ago

“அம்மா எங்கே?”… தவிக்கும் 3 பச்சிளங் குழந்தைகள்… தாயின் உயிரைக் குடித்த குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை… கதறும் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டம் கருமந்துறை அடுத்த மோதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுமதி. இவருக்கும் மாதேஸ்வரன் என்பவருக்கும் திருமணமாகி ஏற்கனவே இரண்டு குழந்தைகள்…

10 minutes ago

ஒற்றைக் காலில் 400 மீட்டர்…! ஊன்றுகோல் கூட இல்லாத ஏழ்மை… ஒரு வீடியோவால் மாறிய விதி… அரசு செய்த நெகிழ்ச்சி உதவி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பலியா மாவட்டத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ராகினி, கல்வி மீதான தனது அளப்பரிய ஆர்வத்தால்…

18 minutes ago

மாவட்ட அரசியலில் இருந்து விலகல்…. மகனுக்காக KN நேரு எடுத்த அந்த ஒரு முடிவு…. அலறும் அறிவாலயம்….!

திருச்சி திமுகவில் முதன்மைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என். நேருவின் மகனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு வழங்கப்படவில்லை…

35 minutes ago

கரூர் இடைத்தேர்தலில் திடீர் திருப்பம்…. தவெகவுக்கு செக் வைக்க செந்தில் பாலாஜி போட்ட “சீக்ரெட்” பிளான்… காலையிலேயே பரபரப்பு..!

கரூர் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தை வீழ்த்துவதற்காக திமுக மூத்த தலைவருமான செந்தில்பாலாஜி தீவிர தேர்தல் உத்திகளை வகுத்து…

38 minutes ago

ஐயோ… என் குழந்தையை காப்பாத்துங்க… பெண்ணின் அலறல் சத்தம்… நடுரோட்டில் நடந்த மிரள வைக்கும் அதிர்ச்சி சம்பவம்… பதறும் CCTV வீடியோ…!

தெருவில் தன் குழந்தையுடன் நடந்து சென்ற பெண்ணை ஒருவன் திடீரென வழிமறித்துத் துன்புறுத்தியபோது, அந்த வழியாகச் சென்றவர்கள் அதைப் பொருட்படுத்தாமல்…

1 மணத்தியாலம் ago