எவ்ளோ அழகு!… சின்ன குழந்தை போல குதித்து குதித்து நடனமாடும் ‘ராஜா ராணி’ சீரியல் நடிகை…  வீடியோவை வைரலாக்கும் ரசிகர்கள்…

By Begam on ஜூலை 31, 2023

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகி நிறைவடைந்த சீரியல் ராஜா ராணி 2.  இந்த சீரியலில் மாமியாராக, சிவகாமி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரவீனா நாயர். இவர் தனது 18 வயதில் சினிமா பயணத்தை தொடங்கியவர்.

   

30 வருடங்களுக்கும் மேலாக திரையுலகில் பயணித்துக் கொண்டுள்ளார். மலையாளத்தில் ‘கௌரி’ என்ற திரைப்படம் படம் மூலம் அறிமுகமானார். இதை தொடர்ந்து பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

   

 

விஜய் டிவி, சன் டிவி என தற்போது பல சின்னத்திரை சீரியல்களில் கலக்கி கொண்டு வருகிறார். இப்படி சின்னத்திரையில் பிசியாக வலம் வரும் இவர் சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர்.

இவர் அவ்வப்பொழுது தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் இணையத்தில் பதிவு செய்து வருகிறார். இவர் தற்பொழுது மலையாள பாடல் ஒன்றுக்கு சிறுகுழந்தை போல குதித்து குதித்து நடனமாடும் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…