Categories: சினிமா

நான் ஒன்னும் பணக்கார குடும்பம் எல்லாம் இல்ல.. 12 வயசுலையே நடிப்பு பக்கம் திரும்பிட்டேன்.. மனம் திறந்த நடிகை பத்மபிரியா..!

Spread the love

நடிகை பத்மபிரியா தமிழ் , தெலுங்கு , மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் தொடர்ச்சியாக நடித்து வருபவர்.  தமிழில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து இவர் தமிழில் குறைவாகவே படங்களில் நடித்துள்ளார். பிரபல நடிகையான பத்மப்ரியா தமிழில் தவமாய் தவமிருந்து, சத்தம் போடாதே, பட்டியல், மிருகம் பொக்கிஷம் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

 

 

இந்நிலையில் பத்மபிரியா சமீபத்தில் அளித்த பேட்டியில், பெண்களுக்கு என்று எதற்கு தனியாக பவுண்டரி செட் பண்ண வேண்டும். நாம பிறக்கும்போது பௌண்டரியோட தான் பொறந்தோமா. இந்த சமூகத்தில் தான் சிலர் பெண்களுக்கென தனி ஒரு பவுண்டரி வெச்சிருக்காங்க. நான் 12 வயசுலயே நடிப்புக்கு வந்துட்டேன். ஸ்காலர்ஷிப் முலம்ன் தான் படிப்ப முடிச்சேன். நான் அந்த அளவுக்கு ரிச்சான பேமிலி எல்லாம் கிடையாது. சாதாரண நடுத்தர குடும்பம் தான். எங்க அப்பா ஆர்மில இருந்த சமயத்துல 20 வயசுல கல்யாணம் பண்ணிட்டு வந்தா எங்க அம்மா ஏழு வருஷம் வரைக்கும் தனியா தான் இருந்தாங்க.

 

அப்போ எங்க அம்மா ஒரு பௌண்டரியை தனக்குள்ள அமைச்சுக்கிட்டாங்க. நான் சின்ன வயசுல படிச்சிட்டு இருக்கும்போதே நடிப்பு எனக்கு முக்கியமாக தெரிஞ்சுச்சு. நீ யார் தல ரெண்டு வருஷம் டிகிரி படிக்க போயிட்டேன். படிச்சிட்டு இருக்கும்போதே எனக்குள்ள லவ் செட் ஆகி அப்படியே திருமணமும் நடந்திருச்சு. அதன் பிறகு டெல்லியில் இரண்டு வருடம் ஒரு பைனான்ஸ் கம்பெனியில் தான் வேலை பார்த்தேன். பிறகுதான் இருக்கிறது ஒரு லைப் நம்மளோட கேரியர நாம தான் பாத்துக்கணும் என்பதற்காக சினிமாவில் நடிக்க வந்தேன் என்று பத்மபிரியா பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

நெஞ்சை பதறவைக்கும் வீடியோ… ஓடும் வாகனங்களுக்கு இடையே நடுரோட்டில் தரையிறங்கிய பாராகிளைடர்…!

ஹிமாச்சல பிரதேசத்தின் குல்லு மாவட்டத்தில், மக்கள் மற்றும் வாகன நெரிசல் மிகுந்த பொதுச் சாலையில் பாராகிளைடர் ஒன்று அவசரமாகத் தரையிறக்கப்பட்ட…

4 minutes ago

BREAKING: பதவியை ராஜினாமா செய்தார்… அரசியல் பரபரப்பு…!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தாய்மாமா மகனும், மாநில எம்ஜிஆர் மன்ற துணை செயலாளருமான கே.பி.எஸ். ராஜா, அக்கட்சியில்…

13 minutes ago

“அடேங்கப்பா, கதை இப்படித்தான் போகப்போகுதா?…” முடிவுக்கு வந்த நீண்ட நாள் காத்திருப்பு… ‘ஹார்ட் பீட்’ சீசன் 3 புரோமோ அவுட்… கசிந்தது முக்கிய கதைக்களம்…!

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற மருத்துவத் தொடர் 'ஹார்ட் பீட்'.…

17 minutes ago

“விஜய்க்கு அந்த தைரியம் இருக்கா…?” த.வெ.க தலைவரை நோக்கி பாய்ந்த 500 கோடி குவாரி விவகாரம்…! எம்பி நேரடி அட்டாக்…!!!

தேனி நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஆண்டிபட்டி மற்றும் வருசநாடு பகுதிகளில் புதிய திட்டப் பணிகளைத் திறந்து வைத்த தேனி…

18 minutes ago

டோன்ட் வொரி… அங்கே அவர் இருப்பார்… சமூக வலைதளங்களை ஆக்கிரமிக்கும் விஜயபாஸ்கரின் டாக்டர் பாசம்…!

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சாலையில் விபத்தில் சிக்கிய காவலர் ஒருவரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து நேற்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.…

19 minutes ago

மக்களே உஷார்… இப்ப வேணாம்… சட்டென குறைந்த தங்கம் விலை… பதற்றத்தில் மக்கள்… நிபுணர் ஆனந்த் சீனிவாசன் கொடுத்த முக்கிய எச்சரிக்கை…!

தங்கம் விலை வீழ்ச்சியடைந்து விடுமோ என்ற பீதியில் இந்திய குடும்பங்கள் சுமார் 50 டன் தங்கத்தை விற்றுப் பணமாக்கியதாக செய்திகள்…

25 minutes ago