தமிழ் சினிமாவில் ‘180’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நித்யா மேனன். தமிழ் ,தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் ஓ காதல் கண்மணி ,24, மெர்சல் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். தளபதி விஜயுடன் ‘மெர்சல்’ திரைப்படத்தில் இணைந்து நடித்தது, தமிழ் சினிமாவில் தனக்கு கிடைத்த மிகப் பெரிய ரீஎண்ட்ரி என்று அவரே குறிப்பிட்டு இருந்தார்.
நடிகர் தனுஷ் உடன் இவர் இணைந்து நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் மாபெரும் வெற்றியை அடைந்தது. மேலும் இவர் நடிப்பில் வெளியான ‘wonder woman’ திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இதைத்தொடர்ந்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பயோபிக் கதையை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட அயர்ன் லேடி என்ற படத்தில் நடிகை நித்யா மேனன் நடித்துள்ளார். சமீபத்தில் தெலுங்கில் ‘பீம்லா நாயக்’ படத்தில் பவன் ஜோடியாக நடித்தார்.
நடிப்பில் பிஸியாக இருக்கும் நடிகை நித்யா மேனன் சமூகவலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர். இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் நடிகை நித்யா மேனன் பேசும்போது, ‘தெலுங்கு சினிமாவில் இதுவரை நான் எந்த ஒரு பிரச்சனையையும் சந்தித்தது இல்லை. ஆனால் தமிழ் சினிமாவில் நிறைய பிரச்சனை சந்தித்தேன். ஒரு படத்தின் படப்பிடிப்பு போது தமிழ் சினிமா நடிகர் என்னை துன்புறுத்தினார் என கூறியுள்ளார். இதனை கேட்ட ரசிகர்கள் யார் அந்த ஹீரோ கொந்தளித்து வருகின்றனர்.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…