Categories: சினிமா

நாங்க வெறும் 20 நாட்களில் முடித்து விடுவோம், ஆனால் இங்கு அப்படி கிடையாது.. தமிழ் சினிமா பற்றி மனம் திறந்த நிகிலா விமல்..!

Spread the love

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கடந்த 2009 ஆம் ஆண்டு பாக்ய தேவதா என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர்தான் நடிகை நிகிலா விமல். அதன் பிறகு இவர் மலையாளத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான லவ் 24/7 என்ற திரைப்படத்தில் ஹீரோயினியாக அறிமுகமானார். தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு தமிழில் வெளியான வெற்றிவேல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினியாக என்ட்ரி கொடுத்தார். தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்க வெற்றிவேல், கிடாரி, பஞ்சு மிட்டாய், ஒன்பது குழி சம்பத், போர் தொழில் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார். இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டதால் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார். இன்னும் சொல்லப்போனால் இறுதியாக வாழை திரைப்படத்தில் பூங்கொடி டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இவர் இடம் பிடித்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

கேரளாவை தாண்டி தமிழ்நாட்டில் கலக்கிக் கொண்டிருக்கும் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. தமிழ் சினிமாவில் பல ஆண்டுகள் நடித்து வந்தாலும் இன்னும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பை இவருக்கு கிடைக்கவில்லை. மலையாளத்தில் பிரித்விராஜ் உள்ளிட்ட டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு இவர் நடித்து வருகின்றார். இந்த நிலையில் இவர் சமீபத்தில் ஒரு யூட்யூப் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் அப்போது மலையாள சினிமாவுக்கும் தமிழ் சினிமாவுக்கும் என்ன வித்தியாசம் பாக்குறீங்க என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த நிகிலா விமல், அந்த அளவிற்கு எந்த வித்தியாசமும் இல்லை. மொழி மட்டும்தான் சற்று மாறுபடும். ஆனால் மலையாள சினிமாவை பொறுத்தவரை 60 நாட்களில், 30 நாட்களில் அப்படி இல்லை என்றால் 20 நாட்களில் கூட நாங்கள் படப்பிடிப்பை எடுத்து முடித்து விடுவோம். ஒரு படத்தின் ஷூட்டிங் அவ்வளவு நாள்தான் செல்லும். ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட பட்ஜெட்டை கூறிவிட்டு அதற்குள் படப்பிடிப்பை முடித்து விட வேண்டும் என்று கூறிவிடுவார்கள். அதனால் காலை ஏழு மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை கூட படபிடிப்பு நடைபெறும். ஆனால் தமிழ் சினிமாவில் அப்படி கிடையாது. ஒரு படத்தின் ஷூட்டிங் என்பது நீண்ட காலம் உள்ளது. இதுதான் அதற்கும் எதற்கும் உள்ள வித்தியாசம் என்று கூறியுள்ளார்.

Nanthini

Recent Posts

இப்படியொரு பழிவாங்கலா?… வேடிக்கை பார்க்கிறதா காவல்துறை?… தாக்கி வீட்டு வாசலில் வீசப்பட்ட இளைஞர்… சிசிடிவியில் சிக்கிய கொடூர முகம்…!!

நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

5 minutes ago

இப்படியொரு நிலையா?… “அவை இல்லாமல் என்னால் வாழ முடியாது”… செல்ல பிராணிகளை பிரிந்து கதறி அழுத பாலிவுட் நடிகர்…!!

பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…

13 minutes ago

திக்… திக்… சாதி மறுப்பு காதலால்… தீபாவளி இரவில் பெற்ற மகளை… துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை… குலை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…

14 minutes ago

பகீர்… வீட்டு வாசலில் விளையாடிய 4 வயது சிறுமி மாயம்… 45 நிமிடத்தில் போலீஸ் செய்த அதிரடி… ஹைதராபாத்தில் அரங்கேறிய சம்பவம்…!!

ஹைதராபாத் நகரின் அட்டாபூர் பகுதியில் நவம்பர் 12-ஆம் தேதி மதியம் 1 மணியளவில், அபியா பாத்திமா என்ற 4 வயது…

22 minutes ago

சீனியர் vs ஜூனியர்!… முகமூடி கும்பலின் அட்டகாசம்… மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்… பல்கலைக்கழக வளாகத்தில் ரத்தக் களரி…!!

தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டம் டிச்பள்ளியில் அமைந்துள்ள தெலுங்கானா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர் தரப்பினரிடையே திடீர் மோதல் வெடித்துள்ளது. அங்கு…

24 minutes ago