நடிகை நிவேதா தாமஸ் கடந்த 2008 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான குருவி திரைப்படத்தில் விஜயின் தங்கையாக நடித்ததன் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து போராளி, நவீன சரஸ்வதி சபதம் மற்றும் ஜில்லா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார். இதில் நவீன சரஸ்வதி சபதம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்திருந்தார்.
இதற்கு முன்பே கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான மை டியர் பூதம் என்ற தொலைக்காட்சி சீரியலில் கௌரி என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்தார். அதனைத் தொடர்ந்து சிவமயம், அரசி மற்றும் ராஜராஜேஸ்வரி உள்ளிட்ட சீரியல்களிலும் இவ்வாறு நடித்திருந்தார். தமிழை விட தெலுங்கில் நிறைய திரைப்படங்களில் ஹீரோயினியாக நடித்துள்ள நிவேதா தாமஸ் தற்போது ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நிவேதா தாமஸ் தற்போது உடல் எடை கூடி குண்டாகி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். இவருடைய சமீபத்திய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் இவருக்கு பட வாய்ப்புகளும் வராமல் உள்ளது. இணைய பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் இடையில் திடீரென காணாமல் போனார். தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு இவரின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ள நிலையில் அந்த வீடியோவில் மிகவும் குண்டாக இருக்கும் இவரை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…