நயன்தாரா இப்படி தான் மேக்கப் போட்டு ரெடி ஆவாங்களா..? அவுங்களோட பியூட்டி சீக்ரெட் இதுதானா..? வைரலாகும் வீடியோ…

By Begam

Published on:

நடிகை நயன்தாரா தமிழின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர். இவர் தனது ரசிகர்களால் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அன்புடன் அழைக்கப்படுகிறார் .முதன் முதலில் மலையாள திரை உலகில் அறிமுகமான இவர், தொடர்ந்து 2005 இல் வெளியான ‘ஐயா’ திரைப்படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து அவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகியது.

   

தமிழ் மட்டும் இன்றி மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில்  நடித்து வருகிறார். முன்னணி நடிகையான இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை ஏழு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.தற்பொழுது இவர்கள் தங்கள் இரட்டைக் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

இவர் நடிப்பில் இறுதியாக வெளியான ஜவான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது. சொந்த வாழ்க்கையில் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், அனைத்தையும் தன் நடிப்பால் தெறிக்கவிட்டு அசத்தி வருகிறார் நடிகை நயன்தாரா.

தன் கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து 9skin என்ற கம்பெனி ஒன்றையும் புதிதாக தொடங்கியுள்ளார் நடிகை நயன்தாரா. இப்படி பிசினஸ் , சினிமா என பிசியாக இருக்கும் நடிகை நயன்தாரா சோசியல் மீடியாவிலும்  ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்பொழுது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது 9skin product – ஐ வைத்து get ready ஆகும் வீடியோ ஒன்றை  பதிவு செய்ய இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by N A Y A N T H A R A (@nayanthara)