#image_title
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற படத்துடன் வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் தற்போது தனது கனவுகளுடன் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழில் இவர் கடைசியாக நடித்த திரைப்படம் அன்னபூரணி. இந்த திரைப்படத்தை தொடர்ந்து மண்ணாங்கட்டி என்கின்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். அன்னபூரணி திரைப்படம் அந்த அளவுக்கு வரவேற்பை பெறாத காரணத்தினால் இவரது கெரியரில் சற்று சறுக்கல் விழுந்துள்ளது. இவர் பிரபல இயக்குனரான விக்னேஷ் சிவன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு மகாபலிபுரத்தில் உள்ள மிகப்பெரிய ரெசார்ட்டில் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்று முடிந்தது. திருமணமான 4 மாதங்களில் இரட்டை குழந்தைக்கு தாயானார் நடிகை நயன்தாரா. வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொண்ட இவர்கள் தற்போது குடும்பமாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.
சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தனது குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள். ஒரு பக்கம் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் பிசினஸ், குழந்தைகள், குடும்பம் என்று அனைத்தையும் கவனமாக பார்த்து வருகின்றார்.
நடிகை நயன்தாரா கிறிஸ்டினாக இருந்தாலும் விக்னேஷ் அவனை காதலிக்க தொடங்கியதிலிருந்து கோயில் கோயிலாக சென்று வருகிறார். இது தொடர்பான புகைப்படங்களை கூட நாம் பார்த்திருப்போம். அந்த வகையில் தற்போது கன்னியாகுமரியில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்திருக்கிறார்கள் நயன்தாரா மற்றும் விக்கி தம்பதியினர். நேற்று மாலை நயன்தாரா சுசீந்திரம் தாணுமாலயசாமி சாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
அதைத் தொடர்ந்து நாகர்கோவிலில் இருக்கும் நாகராஜா கோயிலுக்கும் சென்றிருந்தனர் சாமிதோப்பில் உள்ள அய்யன் வைகுண்டசாமி கோவிலுக்கும் கன்னியாகுமரிகளுக்கும் பகவதி சாமி கோயிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்து வந்திருக்கிறார்கள். அங்கு நயன்தாரா ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. கடவுள் மீது அதிக பக்தி கொண்டவராக மாறி இருக்கும் நயன்தாரா தொடர்ந்து கோயில் கோயிலாக சென்று வருகின்றார்.
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தற்போதைய சூழலில் மிகவும் பலம் வாய்ந்ததாகக் கருதப்படும்…
தமிழக அரசியலில் நீண்டகாலமாகத் தனித்துப் போட்டியிட்டு வரும் நாம் தமிழர் கட்சியைத் தங்கள் பக்கம் இழுக்க காங்கிரஸ் மற்றும் தமிழக…
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது விடுத்த…
சென்னையில் 'ஜெப்டோ' (Zepto) ஆன்லைன் டெலிவரி நிறுவனத்தின் பொருட்களை நூதன முறையில் மோசடி செய்த வாடிக்கையாளரை, டெலிவரி ஊழியர்கள் கையும்…
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர்…
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் 3000 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டு வருகிறது.…