தனது உயிர் மற்றும் உலகத்தோடு இணைந்து பொங்கலை கொண்டாடிய நடிகை நயன்தாரா… வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படம் இதோ…

By Begam on தை 17, 2023

Spread the love

நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் தனது அழகான இரட்டை குழந்தைகளுடன் இணைந்து பொங்கல் கொண்டாடிய புகைப்படத்தை தற்போது இணையத்தில் பதிவு செய்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் தற்போது கனெக்ட் திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனத்தையும் வரவேற்பையும் பெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து இவர் ஒரு சில படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

   

   

பல ஆண்டுகளாக காதலித்த இவர்கள் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணமான நான்கு மாதங்களில் தங்களுக்கு குழந்தை பிறந்ததாக கூறி திரை உலகையே திரும்பி பார்க்க வைத்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றது தெரிய வந்தது .

 

இரட்டை குழந்தைகளுக்கு தாய் தந்தையான இருவரும் பல சர்ச்சைகளையும் பிரச்சினைகளையும் எதிர்கொண்டனர். தற்பொழுது அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து தங்களது குழந்தைகளுடன் மகிழ்ச்சியான வாழ்வை வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று பொங்கல் பண்டிகையை தனது கணவர் மற்றும் இரட்டை குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக கொண்டாடி உள்ளார் நடிகை நயன்தாரா. அப்பொழுது அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தற்பொழுது இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் அவரது குழந்தைகளின் முகங்கள் மட்டும் மறைக்கப்பட்டுள்ளது.

வைரலாகும் அந்த புகைப்படம் இதோ…

 

View this post on Instagram

 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)