Categories: CINEMA

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார்.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற படத்துடன் வலம் வரும் இவர் தற்போது வரை முன்னணி நடிகையாக இருந்து வருகின்றார். ஐயா திரைப்படத்தின் மூலமாக திரை வாழ்க்கையை தொடங்கிய இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் அஜித், விஜய், சூர்யா, ரஜினி, கமல் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்து விட்டார்.

பல சிக்கல்கள் தோல்விகள் வந்தாலும் அதை கண்ட அஞ்சாமல் பீனிக்ஸ் பறவையாக மீண்டெழுந்து வருபவர். இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் வாடகைத்தாய் மூலமாக இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றுக் கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றார்.

சினிமாவில் தொடர்ந்து கவனமாக கவனம் செலுத்தி வரும் நடிகை நயன்தாரா தற்போது மண்ணாங்கட்டி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து மலையாள சினிமாவில் ஒரு திரைப்படத்திலும் கமிட்டாகி நடித்து வருகின்றார். ஒரு பக்கம் சினிமா மற்றொரு பக்கம் குடும்பம் என்று பிஸியாக இருந்தாலும் அதை தொடர்ந்து பிசினஸிலும் சாதித்து வருகின்றார் நடிகை நயன்தாரா.

 

அந்த வகையில் நடிகை நயன்தாரா சமீபமாக ஒரு புதிய தொழிலை தொடங்கி இருந்தார். அதாவது femi 9 என்ற சானிடரி பிராண்டை தொடங்கியிருந்தார். இதற்கு முன்னதாக 9 ஸ்கின் மற்றும் லிபாம் கம்பெனியை தொடங்கியிருந்த நயன்தாரா புதிதாக பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் மிகவும் சவுகரியமாக இருப்பதற்காக femi 9 என்கின்ற இந்த சானிடரி நாப்கின் பிராண்டை தொடங்கியிருந்தார். இது குறித்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கின்றார்.

அதில் “ஒரு பெண் ஒரு மாதத்தில் பல கட்டங்களை கடந்து வருகிறார். ஏற்கனவே நிறைய ஹார்மோன் மாற்றங்களை எதிர்கொள்கிறோம். குறிப்பாக அந்த மாதத்தின் போது அதிக ஆறுதலையும் நேசிப்பையும் எதிர்பார்க்கிறோம். இது அவர்களுக்கு மிகவும் ஆறுதல் அளிக்கின்றது. எனக்கு நன்றாக வேலை செய்ததால் தான் நான் இந்த கம்பெனியை தொடங்கினேன். ஒவ்வொரு பெண்ணும் ஒரு வசதியான மாதவிடாய் சுழற்சியை விரும்புகிறோம் என்று தன்னுடைய femi 9 சானிடரி நாப்கினுக்கு ப்ரமோஷன் செய்திருக்கின்றார் நடிகை நயன்தாரா.

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

அடப்பாவிங்களா.. கடைசில நயன்தாராவையும் இப்படி பண்ண வச்சிட்டீங்களே.. வைரலாகும் வீடியோ..!!

லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்டவருடன்…

3 மணி நேரங்கள் ago

என்னது இவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா..! நடிகை வித்யா பிரதீபின் கணவர் யாருன்னு தெரியுமா..? வைரல் போட்டோஸ்…

நடிகை வித்யா பிரதீப்பின் கணவர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு திருமணம்…

5 மணி நேரங்கள் ago

சிவாஜி பேரன் வீட்டில் இந்திரா ரோபோ சங்கருக்கு தடபுடலாக நடந்த விருந்து.. வைரலாகும் புகைப்படம்..!

நடிகை சுஜா வருணி தனது வீட்டில் இந்திரஜா ரோபோ ஷங்கருக்கு தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

6 மணி நேரங்கள் ago

என் கணவர் கிட்ட காசு இல்லன்னு தெரியாம ஓடி வந்துட்டேன்.. ஒரு வருஷம் கழிச்சு அப்படி சொல்லிட்டாரு.. உண்மையை போட்டுடைத்த நளினி..!!

80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். நடிகர் ராமராஜனும் நடிகை நளினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.…

6 மணி நேரங்கள் ago

ரசிகர் மன்ற தலைவரின் தந்தை மறைவு.. வீட்டிற்கே சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் கார்த்தி.. வைரலாகும் வீடியோ..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி கடந்த 2007-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன பருத்திவீரன் படம் மூலம்…

7 மணி நேரங்கள் ago

100 கோடி வசூலை அள்ளிய விஜய் சேதுபதியின் மகாராஜா.. OTT உரிமத்தை எந்த நிறுவனம் வாங்கியிருக்கு தெரியுமா..?

விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை யார் வாங்கியிருக்கிறார்கள் எந்த தேதியில் வெளியாக உள்ளது என்பதை தொடர்பான தகவல்…

9 மணி நேரங்கள் ago