Categories: சினிமா

41 மில்லியன் வியூஸ் போன பாட்டை சுட்ட நயன்தாரா.. கேரளாவிலும் இப்படி ஒரு பிரச்சனையா?.. நயன் பற்றி அவிழ்ந்த உண்மை..!

Spread the love

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக இந்த திரை துறையில் மிகவும் கம்பீரமாக பயணித்துக் கொண்டிருக்கிறார். சமீப காலமாக இவருடைய அறிக்கை தான் பெரிய பேச்சு பொருளாக மாறி இருந்தது. அவருடைய திருமண ஆவணப்படம் ஒன்று ஓடிடி தளத்தில் வெளியானது. ஆனால் எதிர்பார்த்த அளவு அது மக்கள் மத்தியில் ரீச் ஆகவில்லை. அந்த ஆவணப்படம் சம்பந்தமாக தான் தற்போது பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது. அவருடைய ஆவண படத்தில் நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகளையும் பாடலையும் பயன்படுத்த தனுஷ் என் ஓ சி தரவில்லை என்றும் ஆனால் ட்ரெய்லரில் அதை பயன்படுத்தியதாக நயன்தாரா மீது தனுஷ் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றம் வரை சென்றதாகவும் கூறப்பட்டது.

ஆனால் நயன்தாராவுக்கு தனுஷ் மீது பெரிய அதிருப்தி ஏற்பட்டு அவருக்கு எதிராக ஒரு பெரிய பக்க அளவில் தனது ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தி இருந்தார். ஆனால் அதற்கு தனுஷ் எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை. இப்படி ஒரு பிரச்சனை போய்க்கொண்டிருக்க இதே மாதிரி ஒரு பிரச்சனை தான் கேரளாவிலும் நடந்து கொண்டிருக்கிறதாம். அதாவது கேரளாவிலும் நயன்தாரா மீது ஒரு நபர் போலீஸ் வரை சென்று புகார் அளித்துள்ளார். நயன்தாரா பல தொழில்களில் ஈடுபட்டு வரும் நிலையில் அழகு சம்பந்தமாக 9ஸ்கின் என்ற ஒரு பிசினஸ் செய்து வருவது அனைவருக்கும் தெரிந்ததுதான். அதனை விளம்பரம் செய்வதற்காக ஒரு பிரபல கேரளா பாடலை சம்பந்தப்பட்ட நபரின் அனுமதி இல்லாமல் இந்த விளம்பரத்திற்கு நயன்தாரா பயன்படுத்தியுள்ளார்.

இதனைக் கண்டு அதிருப்தி அடைந்த அதன் உரிமையாளர் நயன்தாரா மீது வழக்கு தொடர்ந்து உள்ளார். தற்போது வரை நயன்தாரா தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை என கூறப்படுகிறது. கரீங்காலிங் என்ற பாடலை தான் அவர் பயன்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் இந்த பாடல் youtube இல் 41 மில்லியன் வியூஸ் போய் உள்ளது. தனுஷ் பிரச்சனை வெளியே வந்த சமயத்தில் இந்தப் பிரச்சனையும் தற்போது சூடு பிடித்துள்ளது. தமிழகத்தில் தனுஷ் மட்டுமல்லாமல் கேரளா வரை சென்று நயன்தாரா பிரச்சனையை உருவாக்கியுள்ளார்.  இந்த செய்தியை பார்த்த ரசிகர்கள் இதையே தான் வேலையா வச்சுட்டு இருப்பாங்க போல என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Nanthini

Recent Posts

FLASH NEWS: மீண்டும் ரூ.1.15 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை… ஒரே நாளில் புதிய உச்சம்… காலையிலேயே ஷாக்…!

தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி (ஏப்ரல் 16), தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்து இல்லத்தரசிகளுக்கும் முதலீட்டாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச…

9 minutes ago

தங்கம் ஒரு சவரன் ரூ.2 லட்சமா?.. சர்வதேச சந்தையில் நடக்கும் ‘கோல்டு பிளான்’.. கோல்ட் குரு வெளியிட்ட பகீர் தகவல்…!

தங்கம் இன்று சாமானியர்களின் கைக்கு எட்டாத ஒரு கனியாக மாறிக்கொண்டிருப்பதன் பின்னணியில் உள்ள உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார காரணிகளை…

12 minutes ago

“தங்கம் விலையில் திடீர் திருப்பம்”… சந்தையில் ஏற்படப்போகும் மிகப்பெரிய மாற்றம்… நிபுணர்கள் வெளியிட்ட பகீர் தகவல்…!

உலகளாவிய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தற்போது அதிரடி உயர்வைச் சந்தித்து வருகிறது. இதற்கு முதன்மையான காரணமாக ஈரான்…

19 minutes ago

தமிழக அரசியலில் திடீர் திருப்பம்… விஜய்க்கு எதிராக நடிகை சொர்ணமால்யா வெளியிட்ட அதிரடி வீடியோ… அதுக்கு அவர் சொன்ன காரணம் தான் ஹைலைட்…!

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திரைத்துறையினரின் அரசியல் வருகையும் கருத்துகளும் விவாதப்…

24 minutes ago

“ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி.. மாணவர்களுக்கு மகிழ்ச்சி”… கோடை விடுமுறை அறிவிப்பில் செக் வாய்த்த பள்ளிக்கல்வித்துறை…!

தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை (ஏப்ரல் 17) முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது.…

29 minutes ago

“மசோதா எரிப்பு… கறுப்புக்கொடி போராட்டம்”… முதல்வர் ஸ்டாலினின் அதிரடி ஆக்‌ஷன்… அதிர வைக்கும் போஸ்ட்…!

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதாவுக்கு எதிராகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரடியாகக் களமிறங்கி தனது கடுமையான…

42 minutes ago