நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் மற்றும் காதல் உருவானது குறித்தான ஆவண படத்தை நெட்பிலிக்ஸ் நிறுவனம் வெளியிட உள்ளது. இந்த ஆவணப்படம் சில தனிப்பட்ட காரணங்களால் தள்ளிப் போனது. அதாவது நானும் ரவுடிதான் திரைப்படத்தின் இயக்குனராக விக்னேஷ் சிவன் இருந்த நிலையில் நயன்தாரா படத்தில் ஹீரோயினியாக நடித்திருந்தார். அந்த திரைப்படத்திற்கு பிறகு தான் இருவருக்கும் காதல் மலர்ந்து பிறகு திருமணம் செய்து கொண்டனர். அதிலிருந்து சில காட்சிகளை இந்த ஆவணப்படத்தில் வைக்க திட்டமிட்டிருந்த நிலையில் அப்படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் தனக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விவகாரம் கடந்த இரண்டு வருடங்களாக நீடித்து ஒரு வழியாக சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் நெட்பிலிக்ஸ் விவகாரத்தில் நடிகர் தனுசுக்கு கடிதம் எழுதியுள்ள நடிகை நயன்தாரா சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில், அன்புள்ள திரு.தனுஷ் கே ராஜா, பல தவறான விஷயங்களை சரி செய்வதற்காக இது உங்களுக்கு ஒரு வெளிப்படையான கடிதம். நல்ல நடிகர் மற்றும் பிரபலமான இயக்குனருமான நீங்கள் உங்களுடைய தந்தை மற்றும் உங்களின் சகோதரர் ஆதரவுடன் ஆசியுடன் இதனை படித்து புரிந்து கொள்ள வேண்டும்.
சினிமா என்பது என்னை போன்றவர்களுக்கு வாழ்வதற்கான போராட்டம் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். எனது netflix ஆவணப்படத்தின் வெளியீடு நான் மட்டுமல்ல எனது ரசிகர்கள் மற்றும் நலன் விரும்பிகள் பலரால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. படத்திற்கும் எனது கூட்டாளிகளுக்கும் எனக்கும் எதிராக நீங்கள் கொதித்துக் கொண்டிருக்கும் பழிவாங்கும் எண்ணங்கள் எங்களை மட்டுமல்ல இந்த திட்டத்திற்காக தங்கள் நேரத்தையும் கொடுத்த மக்களையே பாதிக்கிறது.
எங்கள் NetFlix ஆவணப்பட வெளியீட்டிற்கு உங்களின் ஒப்புதலுக்காக காத்திருந்த 2 ஆண்டுகள் கழித்து, நீங்கள் அனுமதிக்க மறுத்ததால், தற்போதைய பதிப்பை கைவிடவும் மீண்டும் திருத்தவும் மற்றும் தீர்வு காணவும் முடிவு செய்தோம். நானும் ரவுடி தான் படத்தின் பாடல்கள் இன்றுவரை பாராட்டப்படுகின்றன. ஏனென்றால் பாடல் வரிகள் உண்மையான உணர்ச்சிகளிலிருந்து வந்தவை. எங்கள் ஆவணப்படத்தில் நாங்கள் பயன்படுத்தக்கூடிய சிறந்த இசை இல்லை என்பதை அறிந்து, அதைப் பயன்படுத்த எங்களுக்கு வாய்ப்பளிக்க நீங்கள் மறுத்தீர்கள் அல்லது பாடல்களின் வரிகள் கூட. என் இதயத்தை உடைத்தது என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…