தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிப்பை நயன்தாரா. இவர் சமீபத்தில் லேடி சூப்பர் ஸ்டார் என்று தன்னை யாரும் அழைக்க வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். இப்படியான நிலையில் தற்போது நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை சுந்தர் சி இயக்க உள்ளார். வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் என்ற திரைப்படத்தை தயாரிக்க உள்ளார். இந்த திரைப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசை அமைக்க உள்ளார். இந்த திரைப்படத்தை சுமார் 100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தின் படபிடிப்பு இன்று பூஜை உடன் தொடங்கியுள்ளது. இன்று நடைபெற்ற படத்தின் பூஜைக்கே பிரம்மாண்டமாக கோவில் செட் போடப்பட்டு இருந்தது.
இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில் இன்று நடைபெற்ற மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பூஜையில் பேசிய ஐசரி கணேஷ், மூக்குத்தி அம்மன் என்பது தன்னுடைய குலதெய்வத்தின் பெயர். அந்த பெயர் இல்லையே படம் உருவாவதால் அதன் முதல் பாகத்தை தயாரித்தேன். அந்தப் படம் வெளியாகி நான்கு ஆண்டுகள் ஆனபோதிலும் அதன் பிறகு எந்த ஒரு அம்மன் படமும் வெளியாகவில்லை. அதன் காரணமாக நாமே மூக்குத்தி அம்மன் படத்தை ஒரு பிரான்சைஸ் ஆக எடுக்கலாம் என்று முடிவெடுத்து படத்தின் பணிகளை தொடங்கினேன். அதுமட்டுமல்லாமல் பிரான்சைஸ் என்றாலே தமிழில் சுந்தர் சி தான் நினைவுக்கு வருவார்.
அவருடைய அரண்மனை பிரான்சைஸ் எவ்வளவு பெரிய வெற்றி என்பது அனைவருக்குமே தெரிந்தது தான். அதனைப் போலவே மூக்குத்தி அம்மன் 2 படத்தையும் அவரை வைத்து எடுக்க ஆசைப்பட்டேன். அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்து விட்டார். படத்தின் பட்ஜெட் என்னவென்று கேட்டபோது சுந்தர் சி மூன்று விரல்களை காட்டினார். நானும் அதற்கு ஓகே சொல்லி விட்டேன். பான் இந்திய அளவில் இந்த படத்தை எடுக்க உள்ளதால் பிரம்மாண்டமாக எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. மூக்குத்தி அம்மன் படத்திற்கு பலமே நயன்தாரா தான். முதல் பாகம் எடுத்த போது அந்த படத்திற்காக விரதம் இருந்து நடித்துக் கொடுத்தார். அதனைப் போல தற்போது இரண்டாம் பாகம் பூஜை போடும் ஒரு மாதத்திற்கு முன்னரே தன்னுடைய குழந்தைகளுடன் நயன்தாரா விரதத்தை தொடங்கிவிட்டார் என்று ஐசரி கணேஷ் கூறியுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வர உள்ள தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மூன்று முக்கிய திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக…
தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகியாக இருந்த அஜிதா ஆக்னல், அக்கட்சியிலிருந்து விலகி அண்மையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 68 வயது முதியவர் ராஜூ, கடந்த 2021-ஆம் ஆண்டு…
சட்டவிரோதமாக இணையதளங்களில் கசிந்த 'ஜன நாயகன்' திரைப்படம், சில உள்ளூர் கேபிள் டிவி சேனல்களிலும் அனுமதியின்றி ஒளிபரப்பப்பட்ட சம்பவம் பெரும்…
மேற்கு ஆசியாவில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலியில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஈரானை…
சர்வதேச அரசியல் மேடையில் அமெரிக்கா மற்றும் கியூபா இடையிலான உறவு மீண்டும் ஒரு இக்கட்டான நிலையை எட்டியுள்ளது. குறிப்பாக, வெனிசுலாவின்…