நயன்தாரா மற்றும் தனுஷ் இடையே ஆன விவகாரம் தற்போது பூதகரமாக வெடித்துள்ளது. தனுசுக்கு எதிராக நயன்தாரா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் நயன்தாராவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றன. அப்படி இவர்களுக்குள் என்னதான் நடந்தது என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு நானும் ரௌடி தான் என்ற திரைப்படத்தில் நடித்து இயக்குனர் விக்னேஷ் சிவனின் காதல் வலையில் சிக்கினார்.
அந்தத் திரைப்படத்தை தனுஷ் தான் தயாரித்திருந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து வந்தனர். சுமார் ஏழு வருட காதலுக்கு பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுத்தனர். கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இவர்களுடைய திருமணம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவர்களின் திருமணத்தில் பல கட்டுப்பாடுகளுடன் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். திருமணம் குறித்த ஒரு சில புகைப்படங்கள் மட்டுமே இணையத்தில் வெளியாகி இருந்தது.
இப்படியான நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணத்தை நெட்ப்ளிக்ஸ் ott தளத்தில் ஆவணப்படமாக வெளியிட இருவரும் முடிவு எடுத்தனர். திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் கழித்து இவர்களின் திருமண ஆவணப்படம் வருகின்ற நவம்பர் 18ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படியான நிலையில் தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் நானும் ரவுடிதான். இந்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பின் போது தான் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இடையே காதல் மலர்ந்தது.
இதனைத் தொடர்ந்து இப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பின் போது தனுஷ் மற்றும் நயன்தாரா இடையே மோதல் வெடித்ததாக சொல்லப்பட்டது. அந்த தகவலை நயன்தாரா தற்போது உறுதிப்படுத்தியுள்ளார். நயன்தாராவின் திருமண ஆவண படத்தில் நானும் ரவுடிதான் பாடல்களையும் மேக்கிங் வீடியோவையும் பயன்படுத்தி இருந்தனர். ஆனால் தனுஷ், நானும் ரவுடிதான் படத்தில் இடம் பெற்ற பாடலை மூன்று செகண்ட் பயன்படுத்தியதற்காக 10 கோடி கேட்டதாக நயன்தாரா தெரிவித்தார்.
இது தொடர்பாக தனுஷை நேரடியாக தாக்கி கடந்த இரண்டு ஆண்டுகளாக இதனால் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் நயன்தாரா இன்று மூன்று பக்க லெட்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் இடம் பெற்ற அந்த சீனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இந்த ஒரு சீனை நாங்கள் பயன்படுத்தியதற்காக தான் தனுஷ் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுதான் நயன்தாரா மட்டும் தனுஷுக்கு இடையேயான மோதல். இதற்கு தனுஷ் தற்போது பதில் அளிக்கவில்லை என்றால் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்துமே உண்மையாகிவிடும். அதே சமயம் நயன்தாராவின் இந்த அறிக்கைக்கு தனுஷ் பதில் அளித்தாலும் இந்த மோதல் மேலும் முற்றும் என்பதும் உறுதி தான்.
பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…
பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…
சிபிஎம் தலைவர் பி. சசியின் சகோதரரான பி. சரசன் (54) அடூர் பாலம் அருகே நிகழ்ந்த பயங்கரச் சாலை விபத்தில்…
தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…
ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…
குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…