#image_title
தமிழ் சினிமாவில் பிரபலமான புகழ் பெற்ற நடிகராக இருந்தவர் நெப்போலியன். 1990களில் புகழின் உச்சியில் இருந்தார் நெப்போலியன். அப்போது வெளிவந்த பாரதிராஜா இயக்கிய பல கிராமத்து கதையம்சம் கொண்ட படங்களில் நெப்போலியன் நடித்திருப்பார். அவரது தோற்றமும் முறுக்கு மீசையும் கிராமத்து கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்தும். அதுவே அவரை பிரபலமாக்கியது.
சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே 2000-ல் காலகட்டத்தில் அரசியலில் நுழைந்தார் நெப்போலியன். அவரது அரசியல் வாழ்க்கை எப்படி தொடங்கியது? அது என்ன என்பதை பற்றி உங்களுக்கு தெரியுமா? அதைப்பற்றி இனிக் காண்போம். நெப்போலியன் முன்னாள் மக்கள் தொகை அமைச்சர் கே என் நேருவின் தனிப்பட்ட உதவியாளராக அரசியலில் நுழைந்தார். பிறகு திமுக கட்சியில் இணைந்தார். அந்தக் கட்சியில் இணைந்து மக்கள் தொடர்பு மற்றும் பிரச்சார ஒருங்கிணைப்பாளராக பணியாற்றினார்.
2021 ஆம் ஆண்டு நெப்போலியன் ஆசியாவின் மிகப்பெரிய தொகுதியான வில்லிவாக்கம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டார். இந்த தேர்தலில் வெற்றி பெற்று வில்லிவாக்கம் எம்எல்ஏவாக பணியாற்றினார். ஒருங்கிணைப்பாளராக இருந்து மிகப்பெரிய தொகுதியின் எம்எல்ஏ வாக நெப்போலியன் முன்னேற்றத்தில் அரசியல் பயணத்தை கொண்டு சென்றார்.
2007 ஆம் ஆண்டு தமிழ் மொழி இலக்கியம் தமிழ் கலாச்சாரத்திற்கு பங்களிப்பவர்களுக்கு முரசொலி அறக்கட்டளையால் வழங்கிய கலைஞர் விருதினை வென்றார் நெப்போலியன். பின்னர் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டார் நெப்போலியன். இந்த தேர்தலில் 3,98,742 வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றி பெற்று எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதிலிருந்து எம்பி ஆக அரசியல் பயணத்தை வெற்றிகரமாக நடத்தி வந்தார் நெப்போலியன்.
தனது பதவியில் இருக்கும் போது மக்களுக்கு பலவித நலத்திட்ட உதவிகளையும் தனி மனிதனாக பல ஏழை எளிய மக்களுக்கும் உதவி இருக்கிறார் நெப்போலியன். பிறகு 2010 ஆம் ஆண்டு திமுகவுடன் ஆன சிறு கருத்து வேறுபாட்டால் கட்சியிலிருந்து வெளியேறினார் நெப்போலியன். தனது மூத்த மகன் தனுஷிற்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் அமெரிக்காவிலேயே போய் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக செட்டில் ஆகிவிட்டார் நெப்போலியன்.
வயது வெறும் எண் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், 78 வயதான பிரபல மூத்த பாடகி உஷா…
மும்பை வீதிகளில் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, எவ்விதச் சோர்வுமின்றி உற்சாகமாகச் சொமேட்டோ உணவு விநியோகம் செய்துவரும் மாற்றுத்திறனாளி…
உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியர் வேலை கிடைக்காததால் ராபிடோ ஆட்டோ ஓட்டிக்கொண்டே போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் இளைஞரின் வீடியோ சமூக…
கார்ப்பரேட் அலுவலகத்தில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் விதமாக வெளிநாட்டுப் பெண் அதிபர் முன்னிலையில் பெண் ஊழியர் ஒருவர் உற்சாகமாக நடனமாடிய…
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்ற…
சன் தொலைக்காட்சியின் 'கல்யாண பரிசு' தொடர் மூலம் பிரபலமடைந்த சின்னத்திரை நடிகர் ஈஸ்வர், தனது முன்னாள் மனைவி ஜெயஸ்ரீயை விவாகரத்து…