பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை நந்திதா தாஸ். இவர் கடந்த 2000 ஆம் ஆண்டு அழகி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்தத் திரைப்படத்தில் பார்த்திபனுடன் இணைந்து நடித்திருப்பார். அதில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்ட நிலையில் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தையும் பிடித்தார்.
அதன் பிறகு மணிரத்தினம் இயக்கத்தில் உருவான கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளிட்ட ஒரு சில தமிழ் திரைப்படங்களில் நடித்த இவர் கடந்த ஆண்டு தெலுங்கு திரைப்படம் ஒன்றில் கூட நடித்திருந்தார். இப்படி பிசியாக நடித்து வந்த இவர் கடந்த 2002ஆம் ஆண்டு சௌமியா சென் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் திருமணம் முடிந்து சில வருடங்கள் மட்டுமே ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்த இவர் சில வருடங்களில் விவாகரத்து பெற்று பிரிந்தார். அதன் பிறகு படங்களில் பிசியாக நடித்து வந்த நிலையில் சுபோது மசகாரா என்பவரை மறுமணம் செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து இந்த தம்பதிகளுக்கு விஹான் என்ற ஒரு மகனும் உள்ளார்.
ஆனால், ஏழு வருடங்கள் மட்டுமே நீடித்தது இந்த திருமண வாழ்க்கை. சுபோது மசகாராவை கடந்த 2017 ஆம் விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்தனர். மேலும், நடிகை நந்திதா தாஸ் அவர்கள் தெலுங்கு சினிமாவில் தற்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். சோசியல் மீடியாவிலும் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை நந்திதா.
இவர் அவ்வப்பொழுது தனது புகைப்படங்களையும் , குடும்ப புகைப்படங்களையும் இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.அந்த வகையில் நடிகை நந்திதா பதிவு செய்துள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘அழகி பட நடிகையா இது?… வயதான தோற்றத்தில் இப்படி மாறிட்டாங்களே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
ஆரம்பத்தில் இயற்கை மரணம் என்று கருதப்பட்ட ஒரு சம்பவம், மறைக்கப்பட்டிருந்த செல்போன் கிடைத்ததைத் தொடர்ந்து திட்டமிட்ட கொலையாக உருவெடுத்துள்ள சம்பவம்…
குஜராத் மாநிலத்தில் அரங்கேறியுள்ள நெஞ்சைப் பதறவைக்கும் ஒரு கொடூர சம்பவத்தில், கணவனே தனது மனைவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கும், கடுமையான…
சென்னை பெருங்குடி கல்லுக்குட்டை அம்பேத்கர் புரட்சி நகரைச் சேர்ந்த 35 வயதுடைய லோகநாதன் என்பவர், ஆன்லைன் டெலிவரி நிறுவனமான ‘செப்டோ’வில்…
வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் தனிப்பட்ட உரையாடல்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும் நோக்கில் 'ரெஸ்ட்ரிக்டட் சாட்' என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.…
தமிழகத்தில் நடைபெற்று முடிந்துள்ள இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அரசியல்…
சென்னை மயிலாப்பூரில் நண்பர்களைச் சந்திக்க வந்த 21 வயது ஏசி மெக்கானிக் மர்மக் கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில்…