Categories: சினிமா

நடிகர் தனுஷ்னு நெனச்சு ஏமாந்துட்டேன்.. என் வாழ்க்கையில் அந்த தப்பு பண்ணியிருக்க கூடாது.. ஓபனாக பேசிய நடிகை நமீதா..!

Spread the love

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த நடிகை நமீதா. சமீபத்தில் youtube சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தனது வாழ்வில் நடந்த பல விஷயங்களை பேசி இருக்கின்றார். தமிழ் சினிமாவில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த சொந்தம் என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானவர் நமீதா. பின்னர் விஜயகாந்த் நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினியாக அறிமுகமானார்.

பின்னர் விஜய், அஜித், சரத்குமார், விஜயகாந்த், சத்யராஜ், எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்களுடன் சேர்ந்து பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். ‘ஹாய் மச்சான்’ என்று இவர் அழைப்பது பலருக்கும் பிடிக்கும். கவர்ச்சி நடிகையாக தமிழ் சினிமாவில் பல ஆண்டுகள் இருந்திருக்கின்றார். மேலும் தமிழ் சினிமாவில் நடிகை நமிதா எங்கள் அண்ணன், மகா நடிகன், இங்கிலீஷ் காரன், சாணக்யா, பம்பரக் கண்ணாலே, கோவை பிரதர்ஸ், பச்சை குதிரை, வியாபாரி, நான் அவன் இல்லை, தமிழ் மகன், பில்லா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்திருக்கின்றார். 20 ஆண்டுகளுக்கு முன்பே எந்த அளவுக்கு கவர்ச்சி காட்ட முடியுமோ அந்த அளவுக்கு கவர்ச்சி காட்டி நடித்தவர் நடிகை நமிதா. நீண்ட இடைவெளிக்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகு தனது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து கொண்டு இரட்டை குழந்தைகளை பெற்று செட்டில் ஆகிவிட்டார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருந்த நடிகை நமீதா தெரிவித்திருந்ததாவது “சினிமாவில் கவர்ச்சியாக நடித்தது கூட தனக்கு தவறாக தெரியவில்லை. அந்த சமயத்தில் நான் சற்று திமிராக நடந்து கொண்டேன். பெரிய நடிகை என்கின்ற மமதையுடன் இருந்திருந்தேன். ஒருமுறை எனது தாத்தா தன்னை அழைத்துக் கொண்டு அவரது நண்பர்களை சந்திக்க வைக்க ஆசைப்பட்டார்.

ஆனால் அதெல்லாம் முடியாது என்று கூறி அலட்சியப்படுத்தி விட்டேன். அவர் உயிரிழந்த பிறகு நான் மிகவும் வருத்தப்பட்டேன். என் வாழ்க்கையில் நான் அந்த விஷயத்தை பண்ணிருக்கவே கூடாது என்று நினைத்தேன். கடந்த 2006 ஆம் ஆண்டு ஒரு படத்தில் நடித்தேன். படத்தின் பெயரை நான் கூற விரும்பவில்லை. அதில் நடிகர் தனுஷ் தனக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்று படத்தின் தயாரிப்பாளர் என்னிடம் சொல்லி கால்ஷீட் வாங்கினார்.

ஆனால் படம் தொடங்கிய பிறகு தான் தனுஷின் உறவினர் தான். அப்படத்தில் நடிக்கிறார் என்பது எனக்கு தெரிய வந்தது இது எனக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தியதால் அப்படத்தில் இருந்து பாதியில் விலகி விட்டேன். பின்னர் என்னை சமாதானம் செய்து அப்படத்தை எடுத்து முடித்தனர்” என்று அந்த பேட்டியில் நடிகை நமீதா கூறியிருந்தார்.

Mahalakshmi

Recent Posts

சிக்கலில் எடப்பாடி பழனிசாமி..? வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மறைப்பு… 4 வாரத்தில் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…

15 minutes ago

“எடப்பாடிக்கு ரூ.50,000 கோடி சொத்து” யாரால் வந்தது தெரியுமா..? தேர்தல் முடியட்டும் எல்லாத்தையும் போட்டு உடைக்கிறேன்… பகீர் கிளப்பிய செங்கோட்டையன்..!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…

20 minutes ago

அதிமுக மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரச்சாரத்தில் பணப்பட்டுவாடா…? வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு..!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…

24 minutes ago

FLASH NEWS: காலையிலேயே விஜய்க்கு செம ஷாக்…. சென்னையில் நள்ளிரவில் பாய்ந்த அதிரடி வழக்கு…!

சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…

28 minutes ago

5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி… காலையில் மகிழ்ச்சி செய்தி… தமிழக மக்களுக்கு குட் நியூஸ்….!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…

32 minutes ago

அரசியல் வட்டாரமே ஷாக்..! NDA கூட்டணி வென்றால் மசூதி, சர்ச் இடிக்கப்படும்… பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்..!!

கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…

33 minutes ago