Categories: சினிமா

எனக்காக ராமராஜன் என் குடும்பத்தினரிடம் அடிவாங்கினார்… காதல் பிறந்த கதையைப் பகிர்ந்த நளினி!

Spread the love

தமிழ் சினிமாவில் ஒரு குறுகிய கால சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் ராமராஜன். தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக ராமராஜன் கோலோச்சியது நான்கே நான்கு வருடங்கள்தான். ஆனால் இன்றளவும் அவருக்கான ரசிகர்கள் உள்ளனர்.  அந்த நான்கு ஆண்டுகளில் அவருக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டார். எம் ஜி ஆர் போல ஒழுக்கமான இளைஞனாக மக்கள் தோழனாக தன்னைக் காட்டிக்கொண்டார் ராமராஜன்.

1985 ஆம் ஆண்டு வெளியான மண்ணுக்கேத்த பொன்னு என்ற திரைப்படத்தின் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் மருதாணி, ஹலோ யார் பேசுகிறதே, மறக்க மாட்டேன், சோலை புஷ்பங்கள் ஆகிய திரைப்படங்களை அவர் ஹீரோ ஆவதற்கு முன்பு இயக்கினார். இந்த படங்கள் எல்லாம் கையைக் கடிக்காத அளவுக்கு ஓடி, அவரை ஒரு இயக்குனராக நிலைநிறுத்தின.

அப்போதுதான் அவருக்கு ‘நம்ம ஊரு நல்ல ஊரு’ படத்தில் கதாநாயகன் ஆகும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. அந்த படம் ஹிட்டாக அடுத்தடுத்து சில வெற்றிப் படங்களைக் கொடுத்தார். கரகாட்டக்காரன் திரைப்படம் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. ராமராஜன் அவர் உதவி இயக்குனராக பணியாற்றிய படங்களில் கதாநாயகியாக நடித்த நளினியைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

முதலில் இவர்கள் திருமணத்துக்கு நளினி வீட்டில் யாரும் சம்மதிக்கவில்லையாம். அதனால் ஓடிப்போய்தான் அவர்கள் திருமணம் செய்துகொண்டுள்ளார்கள். இந்நிலையில் சமீபத்தில் அவர் ஒரு நிகழ்ச்சியில் ராமராஜன் மேல் தனக்கு எப்படிக் காதல் பிறந்தது என்பதைக் கூறியுள்ளார்.

அதில் “அவர் என் மேல் ஒருதலைக் காதலில் இருந்தார். அந்த விஷயம் எங்கள் வீட்டில் தெரிந்தபோது அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் ஒருநாள் என்னிடம் பேசிக்கொண்டிருந்ததை தெரிந்துகொண்டு அவரை அழைத்துச்சென்று அடித்து விட்டார்கள். இதைக் கேட்டதும் எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. நமக்காக ஒருவர் அடிவாங்கி இருக்கிறாரே. அவர்களை எல்லாம் நாம் பழிவாங்க வேண்டும். இவரைதான் நான் திருமணம் செய்யவேண்டும் என்று வைராக்கியம் எடுத்துக்கொண்டேன்” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

8 மணத்தியாலங்கள் ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

8 மணத்தியாலங்கள் ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

8 மணத்தியாலங்கள் ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

8 மணத்தியாலங்கள் ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

8 மணத்தியாலங்கள் ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

9 மணத்தியாலங்கள் ago