தமிழில் விஜய் மற்றும் அசின் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான காவலன் திரைப்படத்தில் அசினுக்கு நெருங்கிய தோழியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகை மித்ரா குரியன். இவர் 1989 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்து பிறகு தனது திரை பயணத்தை ஒரு துணை நடிகையாக ஆரம்பித்தார். நயன்தாராவை நெருங்கிய உறவினரான இவர் முதன் முதலில் 2004 ஆம் ஆண்டு மலையாளத்தில் அவருடன் ஒரு திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்திருந்தார். பிறகு மலையாளத்தில் ஒரு சில திரைப்படங்களில் இவர் நடித்து வந்த நிலையில் பட்டப்படிப்பை முடிப்பதற்காக சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருந்தார்.
பின்னர் தமிழில் 2008 ஆம் ஆண்டு வெளியான சாது மிரண்டால் என்ற படத்தில் பிரசன்னாவிற்கு ஜோடியாக நடித்தார். பிறகு சூரியன் சட்டக்கல்லூரி மற்றும் காவலன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். மலையாள படங்களிலும் அடிக்கடி தலைகாட்டி வந்த மித்ரா அங்கு பெரிதாக ஒரு அடையாளத்தை பெற முடியவில்லை. தமிழிலும் இவருக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் டிவி ரியாலிட்டி ஷோவிற்கு சில காலம் நடுவராக இருந்து வந்தார். அதனைப் போலவே சீரியலிலும் இவர் நடித்தார்.
சன் தொலைக்காட்சியில் அழகு சீரியலிலும் இவர் நடித்திருந்தார். இவர் 2005 ஆம் ஆண்டு கொச்சியை சேர்ந்த இசை கலைஞர் வில்லியம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் தனது கணவருடன் அவர் தனது ஒன்பதாவது திருமண நாளை கொண்டாடிய நிலையில் அது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். இதனைத் தொடர்ந்து அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
பீகார் மாநிலத்தில் பாம்பு பிடிக்கும் தொழிலாளி ஒருவர், தன்னை கடித்த பாம்பை அடையாளம் காட்டுவதற்காக மூன்று கொடிய விஷமுள்ள நாகப்பாம்புகளுடன்…
பெங்களூருவில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வரும் ஜெட்ரேலோ ஜேக்கப் என்பவர், காதலித்துத் திருமணம் செய்துகொண்ட தனது மனைவியைக் கொடுமைப்படுத்திவிட்டு, கள்ளக்காதலியுடன்…
தமிழகத்தில் போகி பண்டிகை நேற்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்ட வேளையில், கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகி வைஷ்ணவி செய்த…
தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நடிகர் சரத்குமார் தென் மாவட்டங்களில் உள்ள தென்காசி மற்றும் நாங்குநேரி ஆகிய…
தமிழக அரசியலில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு குறித்த விவாதங்கள் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.…
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தணிக்கை தொடர்பான சட்டப் போராட்டம் தற்போது உச்ச நீதிமன்றத்தை எட்டியுள்ளது. இத்திரைப்படத்திற்கு…