Categories: CINEMA

33 வயதில் குருவாயூர் கோயிலில் காதலனை கரம் பிடித்த மீரா நந்தன்.. வைரலாகும் வெட்டிங் போட்டோஸ்..!

தமிழ் மற்றும் மலையாள மொழியில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை மீரா நந்தன் இன்று காலை குருவாயூர் கோயிலில் தனது காதலரை திருமணம் செய்து கொண்டார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை மீரா நந்தன் பிறந்து வளர்ந்ததெல்லாம் கொச்சியில் தான்.  சின்னத்திரையில் சீரியல் நடிகையாக அறிமுகமான இவர் பின்னர் வெள்ளித் திரையில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். 2007 ஆம் ஆண்டு ஒளிபரப்பான வீடு என்கின்ற சீரியல் மூலமாக அறிமுகமான இவர் பின்னர் 2008 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான முல்லா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

2009 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அகில் ஹீரோவாக நடித்த வால்மீகி என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். முதல் திரைப்படம் இவருக்கு சொதப்பிய காரணத்தினால் அடுத்த அடுத்த திரைப்படங்களும் பெரிய அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. இதைத்தொடர்ந்து தமிழில் நேர்முகம், சண்டமாருதம், காதலுக்கு மரணம் இல்லை, சூரிய நகரம் உள்ளிட்ட படங்களும் தொடர்ந்து தோல்வியை தான் தழுவியது.

தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வந்த இவருக்கு பெரிய அளவு வெற்றி கிடைக்காத காரணத்தினால் மலையாளத்தில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார். நடிகையாக மட்டும் இல்லாமல் ரேடியோ ஜாக்கி, தொகுப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருகின்றார்.

தொடர்ந்து மலையாள சினிமாவில் மற்றும் அதிக கவனம் செலுத்தி வருகின்றார். இவர் தனது நீண்ட நாள் காதலரான Beau Sreeju என்பவரை இன்று குருவாயூர் கோயிலில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் அனைத்தையும் அவர் இணையத்தில் பகிர்ந்திருக்கின்றார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

ராதிகாவின் அம்மாவை அடிக்க கை ஓங்கிய கோபி.. பரபரப்பான கதைகளத்துடன் நகரும் பாக்கியலட்சுமி சீரியல்..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாகி ஆண்டுகள் கடந்தும் சேனலின் இரண்டாவது…

47 நிமிடங்கள் ago

கிழக்கே போகும் ரயில் படத்தில் முதலில் நடிக்க விருந்தது இந்த மெகா ஸ்டாரா..? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..!!

தமிழ் திரைப்படத் துறையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் பாரதிராஜா. கடந்த 1977-ஆம் ஆண்டு ரிலீசான 16 வயதினிலே…

2 மணி நேரங்கள் ago

புதிய சீரியலை களமிறக்கும் சன் டிவி.. மீண்டும் என்ட்ரி கொடுக்கும் பிரபல ஹீரோயின்.. ப்ரோமோவே வேற லெவலில் இருக்கே..!!

சன் டிவியும், விஜய் டிவியும் போட்டுக் கொண்டு புது புது நிகழ்ச்சிகளை ஆரம்பித்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித்…

3 மணி நேரங்கள் ago

தமிழ் சினிமா மட்டுமில்ல.. இந்திய சினிமாவே தயாரா இருக்கணுமாம்.. தங்கலான் படம் குறித்து இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் வெளியிட்ட மாஸ் அப்டேட்..!!

தமிழ் சினிமாவில் தனது மாறுபட்ட கெட் அப் மற்றும் நடிப்பால் ரசிகர்களை கட்டி போட்டவர் விக்ரம் இப்போது விக்ரம் பா.ரஞ்சித்…

5 மணி நேரங்கள் ago

நான் தூக்கி வளர்த்த குழந்தை.. இன்னைக்கு வளர்ந்து மிகப்பெரிய விஷயத்தை செய்ய போறாரு.. வீடியோ வெளியிட்டு லாரன்ஸ் உருக்கம்..!!

சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ராகவா லாரன்ஸ். நடிப்பு மட்டுமில்லாமல் பிறருக்கு உதவி செய்யும் குணத்தால் மக்கள் மனதில்…

6 மணி நேரங்கள் ago

கொண்டாட்டம் ஆரம்பம்.. வெட்கத்தில் சிவந்த நடிகர் வரலட்சுமி முகம்.. வைரலாகும் மெஹந்தி கிளிக்ஸ்..!!

தமிழ் சினிமாவில் ஹீரோயின் ஆகவும் சரி வில்லியாகவும் சரி தனது நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் வரலட்சுமி சரத்குமார். இவர் பிரபல…

6 மணி நேரங்கள் ago